மலேசியா விமான நிலை யத்தில் நயன்தாரா எதிர் கொண்ட பிரச்சினை குறித்து 'இருமுகன்' படக் குழுவினர் விளக்கம் அளித்து ள்ளனர்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப் பிடிப்பு மலேசியா வில் தொடங்கி நடை பெற்று வருகிறது.
இப்படத்துக்கு 'இருமுகன்' என தலை ப்பிட்டு இருப்பதாக அறிவித்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணைய த்தில் வெளியிட ப்பட்டன.
முதலில் விக்ரம், நித்யா மேனன் சம்பந்தப் பட்ட காட்சிகளை படமாக்கி வந்தனர்.அதனைத் தொடர்ந்து விக்ரம்,. நயன்தாரா சம்பந்த ப்பட்ட காட்சிகளை மலேசியாவில் படமாக்கி வந்தது படக்குழு.
இந்நிலையில், மலேசியா விமான நிலையத்தில் வைத்து நயன்தாரா தடுப்புக் காவலில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமான நிலையத்தில் நயன்தாராவுடன் மலேசிய போலீஸ் அதிகாரிகள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் சமூக வலைத் தளங்களி லும், வாட்ஸ்ஆப்-பிலும் வேகமாக பரவியதால் சினிமா உலகம் பரபரத்தது.
இது குறித்து படக்குழுவினர் அளித்த விளக்கத்தில், மலேசிய விமான நிலையத்தின் இரண்டு முனை யங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை.
வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் கே.எல்.1 மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ கே.எல்.2 மூலம் இயங்குகிறது.
இங்கு குடியேற்ற அதிகாரிகள் பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப் பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டனர்.
பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைளுக்கு தீர்வு கண்டதோடு, மொத்தக் குழுவும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறு மில்லாமல் பயணித்துள்ளனர்.
நயன்தாராவின் புகைப் படங்களோடு அவரது பாஸ்போர்ட் நகலும் ஆன்லைனில் வெளியாகின. படத்தயாரிப்புக் குழு குடியேற்றதுறை மீது புகார் அளித்தனர்.
மலேசியா ஆன்லைன் ஊடகமே இத்தகைய தவறான செய்தி பரவ காரணம் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது