சென்னையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று பேருந்துகள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 31 பயணிகள் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது முட்டுக்காடு படகு முகாம் அருகில் வந்தபோது புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.