மகாமகத்திற்கு அப்துல் பாரி வழங்கிய அன்னதானம் | Abdul Bari, a beckoning makamakam !

கும்பகோண த்தில் மகா மகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கு வதற்காக முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் பாரி 1,100 மூட்டை அரிசியும், 1 லட்சம் தண்ணீர் பாட்டிலும் நேற்று வழங்கினார்.
கும்பகோண த்தில் மகா மக பெருவிழா வருகிற 13ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடை பெறுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு அமைப் பினரும், மகா மகத்திற்கு வரும் பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங் கவுள்ளனர்.

அதற்காக அன்ன தானம் வழங்குப வர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூ ப்பனார் தலைமை வகித்தார். 

மாவட்ட தலைவர் ராம் குமார் வரவேற்றார். மாநில செயற் குழு உறுப்பினர் சந்திர சேகர மூப்பனார் முன் னிலை வகித்தார். 

விழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் உரிமை யாளர் அப்துல் பாரி வழங்கிய 1,100 அரிசி மூட்டை களையும், 1 லட்சம் தண்ணீர் (அரை லிட்டர்) பாட்டில் களையும்

மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் மகா மகத் தின் போது அன்ன தானம் வழங்க வுள்ள பல் வேறு அமைப்பி னருக்கும் பிரித்து வழங் கினார். 

இதில் பிராமணர் சங்கத் திற்கு 500 மூட்டை அரிசி, 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில், இஸ்கான் அமைப் பிற்கு 300 மூட்டை அரிசி, 50 ஆயிரம் தண்ணீர் பாட்டில், ரோட்டரி சங்கத்திற்கு 200 மூட்டை அரிசி, 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்,

தேப்பெருமா நல்லூர் சிவன் கோயில் அன்னதான கமிட்டிக்கு 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில், அகில பாரத துறவி யர்கள் மாநாட் டிற்கு 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில், குடந்தை ஜவுளி சங்கத்தி னருக்கு 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில்,
காவல் துறைக்கு 100 அரிசி மூட்டைகள் உள்பட பல் வேறு அமைப்பி னருக்கு மொத்தம் 1100 மூட்டை அரிசியும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில் களும் மகா மகத்தின் போது அன்ன தானம் வழங்கு பவர்களிடம் வழங்கப் பட்டது.

இந்த விழாவில் நகர தலைவர் சங்கர், மாநில செயலா ளர் அசோக் குமார், மாநில இணை செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings