ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !

கைநிறைய சம்பளம்னு செட்டிலான பிறகு தான், கல்யாணம் பண் ணிப்பேன் என்று கனவுகளுடன் காத்திருந்தவர், மலேஷியாவின் ஜொஹோர் நகரைச் சேர்ந்த அனிதா.
ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
ஆசைப்பட்ட மாதிரியே மருத்துவ மனையில் ஃபார்மஸி பிரிவில் வேலை கிடைக்க, வீட்டில் திரும ணத்துக்கு சந்தோஷமாக நாள் குறித் தார்கள். 

அனிதாவின் வெட்க முகம் பார்த்து பூரித்த சகபணி யாளர்கள், அவருடைய மண நாளன்று கொடுக்க வேண்டிய பரிசுப் பொருளை ஆலோசித்திருந்த நேரம், அவருக்கு மலர் வளையம் வைக்க நேர்ந்தது பெரும் துயரம்! 
அனிதாவுக் காக காலன் காத்திருந்தது, மின்சாரத்தில்! அங்கே அனிதா பணியாற்றிய மருத்துவ மனையில், குழந்தைகள் நல மருத்துவர் பொன்மணி, அனிதாவின் நெருங்கிய தோழி.

”27 வயசுலயே வாழ்க் கையைப் பத்தி அவ்வளவு தெளிவு இருந்துச்சு அனிதாகிட்ட! துறு துறுனு இருக்கிற அவளைப் பிடிக்காத வங்களே யாரும் இல்ல. 
ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
அன்னிக்கு ராத்திரி முழுக்க பலத்த மழை. காத்தும் பலமா வீசிட்டு இருந்துச்சு. மறுநாள் குளிக்கப் போனப்ப, வாட்டர் ஹீட்டர்ல ஷாக் அடிச்சு, அனிதா இறந்துட்டா. 

நேத்து இருந்தவ, இன்னிக்கு இல்லைனு நினைக்கும் போதே சோகம் நெஞ்சை அடைக்குது…” – பேச்சு வராமல் தடுமாறிய பொன்மணி, ”எதிர்பாராம நடந்த விபத்து தான்.
40+ உடனே செக் செய்து கொள்ளுங்கள்
ஆனா, மின்சார விஷயத்துல அஜாக் கிரதையா இல்லாம இருந்திருந்தா, அனிதா இப்ப எங்க ளோடு பேசி சிரிச்சுட்டு இருந்திருப்பாளே! 

இதை எல்லாரும் ஒரு பாடமா எடுத்துக் கணும்” என்று சோகக் குரலில் சொன் னதைக் கேட்டதும், 

அனிதாவுக்கான அஞ்சலியை நம் மனது செலுத்தி யதோடு, அந்த ஓருயிர் அடித்திருக்கும் எச்சரிக்கை மணியை எல்லோரிடமும் ஒலிக்க வேண்டும் என்கிற எண்ண த்தையும் கொண்டு வந்தது. 

அதன் விளைவே இந்தக் கட்டுரை! வாட்டர் ஹீட்டர்களால் சின்னச் சின்ன விபத்துகள் தொடங்கி, அதிக பட்சமாக இறப்புகள் வரை அடிக்கடி கேள்விப்படும் விஷய மாகவே இருக்கிறது. 

இந்த விபத்துகளை, இழப்புகளை எல்லாம் எப்படித் தவிர்ப்பது? 
 ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
மின்சாரத் துறையில் 40 ஆண்டு காலம் அனுபவமிக்க ‘மெக்கானிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்’ துறை பொறியாளர் ராகவன், இதைப் பற்றி விரிவாகவே பேசினார்.”

வீட்டுக்கு வொயரிங் பண்ணும் போது பாதுகாப்பான வழி முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினா, அது வீட்டுக் குள்ளேயே ஒளிஞ்சிருக்கும் ஆபத்து தான்.
தரமில்லாத பொருட்களால், சரியான முறைப்படி வொயரிங் பண்ணாத கட்டடத்தில், எந்த நேரமும் எங்கிருந்து வேணும்னாலும் ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கு!”

என்று எடுத்ததுமே அலாரம் அடித்தவர், தொடர்ந்தார். ”பொதுவா வொயரிங் பண்ணும் போது, கட்டடத்துல நீர்க்கசிவு இல்லாம பார்த்துக்க வேண்டியது மிக முக்கியம். 

வெறும் எலெக்ட்ரிக்கல் விஷயத்துல மட்டும் கவனம் செலுத்தினா போதாது. 

கன்சீல்டு வொயரிங் பண்ற மாதிரியே, கன்சீல்டு பிளம்பிங் வேலையிலும் கவனமா இருக்கணும். பிளம்பிங் பண்ணும் போது நீர்க்கசிவு வராம இருக்கானு சரி பார்க்கணும்.

கன்சீல்டு வொயரிங் செய்த பிறகு, சிமென்ட் பூசி பெயின்ட் அடிச்சு வொயரிங் செல்லும் பாதையை மறைச்சிருக்கலாம். 

ஆனா, அந்த இடத்தில் பிறகு டிரில்லிங் செய்யும் போது ஷாக் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இதையும் கவனிக்கணும்.
ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
வொயரிங் பண்ணும்போது பேஸ், நியூட்ரல், எர்த்னு சொல்லக் கூடிய மூணு வொயர்களும் கண்டிப்பா இருக்கணும். 

இதில் எர்த் வொயர் இல்லாம இருந்தா, ஷாக் அடிக்க வாய்ப்பு அதிகம். முன்னயெல்லாம் ஏதா வது பிரச்னைனா… மொத்தமா ‘ஃபியூஸ்’ போயிடும்.

இப்ப சர்க் யூட் பிரேக்கர்னு வந்திருக்கிற புது உபகரணம் தான் பெரும்பாலும் பொருத்து றாங்க. மின்சாரக் கசிவு ஏற்படும் போது, இது உடனடியா டிரிப் ஆகி, மின்சாரம் போறத நிறுத்திடும். 
பொதுவா, எர்த் லீக்கேஜ் இருக்கும் போது தான் ஷாக் வர்றதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கும். 

அதனால, வீட்டோட எந்த இடத்தில் எர்த் லீக்கேஜ் ஆனாலும், இந்த சர்க்யூட் பிரேக் கரை பொருத்தியிருந்தா, நம்மை பாதுகாத்துடும். வாட்டர் ஹீட்டரைப் பொறுத்தவரை,

தண்ணியில உப்போட அளவு அதிகமா இருந்தா, வாட்டர் ஹீட்டர்ல இருக்கிற எலிமென்ட் சீக்கிரமே துரு ஏறி, ஓட்டையாகி ஷாக் அடிக்கிற வாய்ப்பை அதிகப்படுத்தும். 

இப்படியான நிலையில் வாட்டர் ஹீட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்யாம குளிச்சாலோ… ஈரக்கையால ஸ்விட்ச் ஆன் செய்தாலே ஷாக் அடிக்கலாம். 

பாத்ரூம்ல மட்டுமில்ல… தண்ணி பைப் போற எல்லா இடத்துலயுமே ஷாக் அடிக்கலாம். இது, மரணம் வரைக்கும் கொண்டு போயிடும் ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கை கொடுத்தார் ராகவன், 

அக்கறை பொங்க! ராகவன் தந்த டிப்ஸ்! 
ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
மிக்ஸியை ஈரக்கையால் கையாளக் கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

தண்ணீர், மிளகாய்ப் பொடி உள்ளிட்டவை மிக்ஸியின் உட்புறம் சென்று ஷாக் ஏற்படுத்த வாய்ப்பிருப் பதால், வருடம் ஒரு முறையாவது சர்வீஸ் செய்வது நல்லது. 

அயர்ன் பாக்ஸை சர்வீஸ் செய்யும் போது, அதில் உள்ள எலிமென்டை மாற்றினாலும், அதன் செயல்பாடு சீக்கிரமே நின்று போக வாய்ப்புள்ளதால், அயர்ன் பாக்ஸை புதிதாக மாற்றி விடுவது நல்லது. 
தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதைத் தவிர்க்கவும். வாட்டர் ஹீட்டரைப் பொறுத்தவரை பிளக் பாயின்டை நேரடியாக சர்க்யூட் பிரேக்கருடன் பொருத்துவது மிக முக்கியம். 

வாட்டர் ஹீட்டர் ஸ்விட்ச்சை பாத்ரூமுக்கு வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஹீட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு குளிப்பது முக்கியம். 

இதில் உள்ள எலிமென்ட் துரு பிடித்துள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு தடவையாவது எலிமென்டை மாற்றுவது அவசியம். சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மிகவும் பாதுகாப்பானவை.

மின் சாதனங்கள் அனைத்தையும் முறையாக சர்வீஸ் செய்து வர வேண்டும். ஐ.எஸ்.ஐ. தர முத்திரை பதிக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். 

உயர் மின்னழுத்த சாதனங்களுக்கு மூன்று பாயின்ட் பின்களை பயன்படுத்துவது அவசியம்.
ஒரு ஷாக் மரணம்.. சொல்லும் பாடம் !
பழைய வீடுகளில் வொயர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டும். 

புதிய வீடுகளாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வொயரின் நிலையை சரி பார்ப்பது அவசியம். பி.வி.சி வொயர்களையே பயன்படுத்த வேண்டும். 
உயர்மின் அழுத்தத்தில் இயங்கக் கூடிய வாட்டர் ஹீட்டர், ஏர்கண்டிஷனர், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட சாதனங்கள், 

16 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்கள் மூலம் இயங்குவது போல பார்த்துக் கொள்ள வேண்டும். பிளக்குகள் லூஸாக இருந்தால் தீப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு.
Tags:
Privacy and cookie settings