சன்னி லியோனுக்கு குவியும் பாராட்டு மழை !

1 minute read
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘வடகறி’ என்னும் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.
சன்னி லியோனுக்கு குவியும் பாராட்டு மழை !
இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். இதில் நிருபர் ஏடாகூடமான பல கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு சன்னி லியோன் மிகவும் பொறுமையுடனும்,

சிரித்த முகத்துடனுமே பதில் அளித்திருக்கிறார். இதே கேள்விகளை வேறு யாராவது ஒரு பிரபலத்திடம் கேட்டால் அவர் நிச்சயம் பொறுமை இழந்திருப்பார். அந்த அளவிற்கு நிருபர் கேட்டிருக்கிறார்.

இந்த பேட்டிக்கு எதிராகவும் சன்னி லியோனுக்கு ஆதரவாகவும் பல இந்தி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
சன்னி லியோனுக்கு குவியும் பாராட்டு மழை !
மேலும் ஸ்ருதிஹாசன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் சன்னி லியோனின் பேட்டிக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.

கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி சன்னி லியோன் ஒரு மென்மையான மனதையுடையவர் என்பது இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings