தொழில்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும் கதாநாயகிகள் !

சினிமாவில் கதாநாயகிகள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருகிறது. கடந்த வருடம் மட்டும் 150-க்கும் மேற்பட்ட நடிகைகள் அறிமுகமாகி உள்ளனர். 
தொழில்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும் கதாநாயகிகள் !
இந்த வருடமும் நிறைய புதுமுகங்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது அபூர்வமாக உள்ளது. 

பல கதாநாயகிகள் படங்கள் இல்லாமல் முடங்கி உள்ளனர். இதனால் முன்னணி கதாநாயகிகள் கவனம் வேறு தொழில்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. 

மார்க்கெட் இருக்கும் போதே சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் ஓட்டல்கள், நகை வியாபாரம், ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.

 நயன்தாரா

தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாரா ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல். 

இந்த தொகைக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிப்போடுகிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நிலங்கள் வாங்கி இருக்கிறார். கேரளாவிலும் பண்ணை வீடு வாங்கி உள்ளார்.
திரிஷா

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். இவர் வாங்கிய இடங்களின் மதிப்பு தற்போது பல மடங்கு கூடி இருக்கிறது.

தமன்னா 

தங்க நகை வியாபாரம் செய்கிறார். புது புது டிசைன்களில் நகைகளை உருவாக்கி அவற்றை இணையதளம் மூலம் விற்பனை செய்கிறார்.

நடிகை நமீதா 

கட்டுமான தொழில் செய்கிறார். சொந்த ஊரான சூரத்தில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்கிறார்.

நடிகை சமந்தா 
சென்னையிலும் ஐதராபாத்திலும் ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கான தொகையை முதலீடு செய்து இருக்கிறார். அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகளும் வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

அனுஷ்கா 

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார். தனது சம்பளத்தின் பெரும் பகுதியை பெங்களூரில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்கிறார். 
தொழில்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும் கதாநாயகிகள் !
அங்கு பெரிய பண்ணை வீடு ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.

டாப்சி 

திருமணங்களை நடத்தி கொடுக்கும் கம்பெனி நடத்துகிறார். மாப்பிள்ளை, பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டு போனால் போதும். திருமண மண்டபத்தை ஒப்பந்தம் செய்வது, 

அலங்காரம் செய்வது, விதவிதமான சாப்பாடு வகைகளை தயார் செய்வது, திருமணத்துக்கு வருபவர்களுக்கு 

வாகனங்கள் ஏற்பாடு செய்வது போன்ற அனைத்தையும் டாப்சியின் நிறுவனம் கவனித்துக் கொள்ளும்.

ஹன்சிகா 
மும்பையில் நிலம் வாங்கி ஆதரவற்றோருக்கு இல்லம் கட்டி வருகிறார். சகுனி, மாஸ் படங்களில் நடித்து பிரபலமான பிரணிதா ஓட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார். 

பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பங்குதாரராக சேர்ந்து இருக்கிறார். விரைவில் சென்னை, ஐதராபாத்திலும் இந்த ஓட்டலின் கிளைகளை தொடங்கப் போகிறாராம்.

காஜல் 

அகர்வால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.

குஷ்பு 

படநிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார்.
சிம்ரன் 

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் டெலிவிஷன் தொடர்கள் தயாரிக்கப் போகிறார்.
Tags:
Privacy and cookie settings