காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை மனநல மருத்துவமனையில் சேர்க்க கார்டு அளித்த லக்னோ மருத்துவமனை ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ராகுலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவினர்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மனநலம் பாதிக்கப் பட்டோர் இருக்கும் வார்டில் அவரை சேர்க்க கார்டு வாங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மனநலம் பாதிக்கப் பட்டோர் இருக்கும் வார்டில் அவரை சேர்க்க கார்டு வாங்கியுள்ளனர்.
ராகுலை அனுமதிக்க கார்டு வழங்கிய விவாகரம் தொடர்பாக கிளார்க் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார், மற்றொரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
ராகுலை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான கார்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பாஜக இளைஞர் அணியின் உத்தர பிரதேச மாநில பொதுச் செயலாளர்
அபிஜாத் மிஷ்ரா பூர்த்தி செய்துள்ளார். அவர் ராகுல் காந்தி மீது ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி, த.பெ. ராஜீவ் காந்தி, துக்லகாபாத், ரேபரேலி, உத்தர பிரதேசம் என்ற முகவரியில் அனுமதி கார்டை பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.