பள்ளி மாணவியை கற்பழித்த நபரை பொலிஸ் நிலையம் புகுந்து வெளியே இழுத்து வந்து வதைத்து கொன்றுள்ளர்கள். இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள, டிமபூர் என்னும் நகரில் பள்ளி மாணவி ஒருவர் கற்பழிக்கப் பட்டுள்ளார்.
35 வயதாகும் இன் நபர் கார்களை வாங்கி விற்கும் பிசினஸ் செய்பவர். கடந்த மாதம் இவர் ஒரு மாணவியை ஹாஸ்டலில் வைத்து பல தடவை கற்பழித்துள்ளார்.
இறுதியில் இவரைப் பொலிசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள். குறித்த இச்சம்பவம் அன் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இளைஞர்கள் யுதவதிகள் என்று ஆயிரக்கணக் கானவர்கள் திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கி, அங்கே இருந்த குற்றவாளியை வெளியே இழுத்து வந்துள்ளார்கள்.
அவரது உடைகளைக் களைந்து முழு நிர்வாணமாக்கி, அவரை வீதியில் 4 கிலோ மீட்டருக்கு கட்டி இழுத்துச் சென்றுள்ளார்கள். உடல் முழுவதும் காயங்களாகி
இறுதியில் துடி துடித்து அன் நபர் இறந்து போய் விட்டார். இவர் கற்பழித்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பை விட மக்கள் இவருக்கு கொடுத்த தண்டனையை கேட்டு பலர் ஆடிப்போய் விட்டார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் எவரையும் கைது செய்யவில்லை. மாறாக மக்களை அமைதியாக இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.