கஞ்சி ஆகாரம் ஆரோக்கியத்தின் ஆதாரம் !

வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்த வக்கில்லை’, `ஒரு வாய் கஞ்சிக்கு வழி இருக்கா சொல்லு’... என விரிகிற சொற் றொடர்கள் எல்லாமே ஆழ்ந்த பொருள் கொண்டவை. 

கஞ்சி ஆகாரம்


அது தான் மனித வாழ்வின் ஆதாரம் என்பதை அப்பட்ட மாக உணர்த்து பவை. மனிதன் உயிர்வாழ ஐந்து நட்சத்திர விடுதி சாப்பாடோ, விருந்தோ தேவை யில்லை; 

உணவாக ஒரு கலையம் கஞ்சி போதும். கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கி யத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை!

‘இன்றைக்கு சர்க்கரை நோயாளி களுக்குப் பரிந்துரைக்கப் படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்... அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகிய வற்றில் தயாரிக் கப்படுவ தாகட்டும்... 

அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மை தரக் கூடியது’ என்கிறார்கள் மருத்து வர்கள். எளிமையான செய்முறை; தண்ணீரில் அல்லது பாலில் கூட இதைத் தயாரி க்கலாம்; 

எளிதாக செரிமானம் ஆகக் கூடியது. தனியாகத் தயாரிக்கப் படுவது தவிர, சாதம் வடித்ததே கூட ஆரோக்கிய மானது; நம் உடலுக்கு பலம் தருவது.

பழைய ‘விக்கிர மாதித்தன் கதை’யில் ஒரு சம்பவம் விவரிக்கப் பட்டிருக்கும். நாள் கணக்கில் பட்டினி கிடந்த ஒருவனு க்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவனால் வாயைத் திறந்து சாப்பிடக் கூட முடியாது. 

உடல் அவ்வளவு பலவீனம் அடைந் திருக்கும். சோற்றை வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாதத்தைப் போட்டு, நெய் ஊற்றி அதை ஒரு துணியில் முடி வார்கள். அந்தத் துணியால் அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப் பார்கள். 

அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்து விடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்து விடுவான். இது வெறும் கதை அல்ல... இதன் மகத்து வத்தை உணர்ந் தவர்கள் எழுதிய யதார்த்தம்.

நம் பாரம்ப ர்யத்தில் மட்டும் அல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விவசாயி களின் முக்கிய உணவாக இது இருந்தி ருக்கிறது; இருக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டிலும் இது தான் எளியோர் களின் முக்கிய உணவு. 

வறுத்த இறைச்சி என்பதெல்லாம், விருந்தில் பெருந்தனக் காரர்களு க்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கும், அரசு அதிகாரி களுக்கும் பரிமாறப் படும் ஒன்று. 

ரொட்டி என்பதேகூட நகரங்களில் மட்டும் சாப்பிடப் படும் ஆடம்பர உணவாகத் தான் கருதப் பட்டிருக் கிறது. மாயா, ஆஸ்டெக் நாகரி கங்களில் கூட கஞ்சி பிரதான உணவாக இருந்த தற்கான ஆதாரங்கள் உள்ளன.

இதை வெறுமனே அப்படியே குடிக்கலாம்; தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், ஊறுகாய், கருவாட்டுத் துண்டு இருந்தால் அமர்க்களம். சீனாவிலும் பாரம்பர்ய உணவாக கஞ்சி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

சீனர்களின் வரலாற்று ஆவணமான `புக் ஆஃப் சோவ்’ (The Book of Zhou), நூலில் `முதன் முதலில் சிறு தானியத்தில் கஞ்சி தயாரித்தது அரசர் ஹுவாங் டி (Huang Di)' என்கிற குறிப்பு இருக்கிறது. 
ஆரோக்கியத்தின் ஆதாரம்


பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய `ஆலிவர் ட்விஸ்ட்’ (Oliver Twist) நாவலில் வறுமையின் அடையாள மாகக் கஞ்சியை சித்தரித் திருப்பார். 

ஆனால், மென்மை யான சத்துள்ள இந்த உணவு, மேல்தட்டு மக்களையும் வசியப் படுத்தியி ருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சி... கேரளாவிலும் கர்நாட காவிலும் ஆந்திராவிலும் கிட்டத் தட்ட இதே பெயரில் அழைக் கிறார்கள். 

மற்றபடி ஒவ்வொரு மாநிலத் துக்கும் ஒவ்வொரு பெயர்... வங்காளத்தில் `ஜாவு’ (Jaou), ஒடிசாவில் பகல் பாத் (Pakhal Bhat). ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்கள்... 

பர்மியர் களுக்கு `ஹ்சான் ப்யோக்’ (Hsan Pyok), போர்ச்சு கீசியர்களுக்கு `கேன்ஜா’ (Canja), தாய்லாந்து காரர் களுக்கு `காவோ டோம்’ (Khao Tom), ஜப்பானியர் களுக்கு `காயு’... நீள்கிற கஞ்சியின் பெயர் களுக்கு முடிவே இல்லை.

இந்தோனேஷியா, கொரியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், போர்ச்சுக்கல், இலங்கை, சிங்கப்பூர், துருக்கி... என கஞ்சி இல்லாத தேசமே இல்லை. ஏனென்றால், இது மனிதனின் ஆதி உணவு... ஆதார உணவு.

இரண்டு நாள் சோறில்லாத ஒருவனுக்கு ஒரு குவளை கம்மங்கஞ்சி சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு. 

இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங் கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது பெண்ணின் மாத விடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்பு களுக்கு பலம் கொடுக்கும். 

காய்ச்சல் வந்த நோயாளி களுக்கு `கஞ்சி மட்டும் கொடுங்க...’ எனப் பரிந்துரை க்கும் டாக்டர்கள் இன்றைக்கும் இருக்கி றார்கள். 

பாலூட்ட இயலாத தாய்மார்கள் குழந்தை களுக்குக் கலக்கிக் கொடுக்கும் பல சத்து மாவுகள், கஞ்சியின் இன்னொரு வடிவம் தான். 

ஆனால், அதுவும்கூட குழந்தை களுக்கு சத்தில்லாத வெறும் உணவு என்ற வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. 

தாய்ப் பாலில் உள்ள ஊட்டச்சத்து இந்தக் கலவை களில் கிடைப்ப தில்லை. வறுமை பாதித்தப் பகுதிகளில் அரசும் அதிகாரி களும் கடைசி கடைசியாக இறங்கி வந்து செய்கிற வேலை... கஞ்சித் தொட்டி திறப்பது! 
சத்தில்லாத வெறும் உணவு


இது பல இடங்களில் மக்களின் வயிற்றை நிறைத்து விடுகிறது; பல விஷயங் களை மறந்து போகவோ ஒத்திப் போடவோ வைத்து விடுகிறது என்பது யதார்த்தமே! பத்மினி

கஞ்சியின் தரும் ஆரோக்கியப் பலன்களைப் பட்டிய லிடுகிறார் டயட்டீஷியன் பத்மினி... ``கஞ்சி ஆரோக்கிய உணவு. நோயாளி களுக்கு மருந்தும் கூட. பொதுவாக நோய் வாய்ப் பட்டவர் களுக்கு அரிசி 

அல்லது நொய்க் கஞ்சி வைத்துக் கொடுப்பது நம் வழக்கம். அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக் கூடியவை. 

காலையில் எழுந்து கஞ்சி குடித்தாலே அன்றைக்கு முழுமைக் குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்து விடும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக் கியாகச் செயல்படும்; மலச் சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரி யாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். 

கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். 

உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். ஏதாவது ஒரு நோய்த் தொற்று காரணமாக ஜுரம், வாந்தி வரும் போது, அவற்றின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும். 

அதனால் தான் ஜுரம் வந்தவர் களுக்கு இதைக் கொடுக்கச் சொல் கிறார்கள். ஜுரத்தில் இருந்து விரைவாக மீள்வதற்கும் இது உதவும்.

வயிற்றுப்  போக்கு உள்ளவர் களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர் தான். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது பயனளிக்கும். 

வயிற்றுப் போக்கு வந்த குழந்தை களை சரியான நேரத்தில் கவனிக்கா விட்டால், அவர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாகி விடுவார்கள். 
வயிற்றுப் போக்கு


கஞ்சித் தண்ணீர், குழந்தை களின் வயிற்றுப் போக்கைக் கட்டுப் படுத்தும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் உதவும். அரிசிக் கஞ்சி மட்டுமல்ல... சாதம் வடித்த கஞ்சிகூட பல பயன் களைத் தரக்கூடியது. 

சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங் களுக்கும் இது உதவும். உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். கிராமங் களில் இதைக் குடித்து விட்டு வயல் வேலைக்குப் போகிற வர்கள் இன்றைக்கும் இருக் கிறார்கள். 

இது, உடல் வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும். அதனால் தான் கோடை காலத்தில் கஞ்சி குடிக்கச் சொல்லிப் பரிந்துரைக் கிறார்கள் மருத்துவர்கள். இது, அல்சீமர் போன்ற மறதி நோய் வராமல் தடுக்கும். 

அரிசி மட்டுமல்ல, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ்... என எதிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். கஞ்சி, பக்க விளைவுகள் ஏற்படுத்தாதது; உடலுக்கு ஆரோக் கியம் தருவது!’’

பிறகென்ன... ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவாய் கஞ்சியைக் குடித்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம் தானே!
Tags:
Privacy and cookie settings