முதியோர் பஸ் பாஸ் திட்டம் இணையத்தில் விண்ணப்பம் !

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டத்தை உடனடியாக நடை முறைப்படு த்துவது குறித்து தமிழக தலைமை செயலாள ருடன் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
முதியோர் பஸ் பாஸ் திட்டம் இணையத்தில் விண்ணப்பம் !
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணைய தளத்தில் இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப் பட்டுள்ளது. 

முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் செயல் படுத்தப் படும் என்று கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக வாக்குறுதி அளித்தது. 

இத்திட்டத்தை செயல் படுத்தக் கோரி முதியோர் அமைப்புகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் இருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியோர் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் வரும் 24-ம் தேதி முதல் செயல் படுத்தப் படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். 

முதல் கட்டமாக இத்திட்டம் சென்னையில் தொடங்கப்படும். பின்னர், மற்ற இடங்களுக்கு விரிவு படுத்தப்படும் என அறிவித் துள்ளார். 

இத்திட்டத்தை தமிழகம் முழு வதும் விரிவுபடுத்தினால் சுமார் 75 லட்சம் முதியோர் பயன்பெறு வார்கள்.

முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலாளருடன் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.
எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணைய தளத்தில் (www.mtcbus.org) முழுமை யான தகவல்களுடன் விண்ணப்ப படிவம் வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப் பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 

வயதுச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளிச் சான்றிதழ் போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து, கையெழுத் திட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப் பத்தை பூர்த்தி செய்து சென்னை யில் சைதாப் பேட்டை, தாம்பரம், வடபழனி, திருவான் மியூர், அடையார், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை உட்பட 42 பேருந்து நிலை யங்கள், பணிம னைகளில் விண் ணப்பி க்கலாம்.

நேரில் வரவேண்டும்

அவர்களு க்கு அடையாள அட் டையுடன், டோக் கனும் வழங்கப் படும். இந்த அட்டை, டோக்கனை நடத்து நர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம். 
முக்கியமாக விண்ணப்பதாரர் நேரில் வந்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும்.

மாதந் தோறும் தலா 10 டோக்கன் வழங்க ப்படும். ஒரு டோக்கனை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த டோக்கன் மூலம் அந்த பஸ்சின் கடைசி நிறுத்தம் வரை அவர்கள் பயணிக்கலாம். 

ஏசி பஸ்கள் தவிர, மற்ற மாநகர பஸ்கள், சிறிய பஸ்கள் அனைத் திலும் அவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்கு வரத்து துறை அதிகாரிகள் தெரிவி த்தனர்.
Tags:
Privacy and cookie settings