அரை நிர்வாண உணவு நிகழ்ச்சி கல்லூரில் பரபரப்பு !

1 minute read
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மோனிகா ரோஸ்ட் வோல்டு (23). இவர் நண்பர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்தார்.
அரை நிர்வாண உணவு நிகழ்ச்சி கல்லூரில் பரபரப்பு !
அதற்காக உடலில் இருந்து தனது ஆடைகளை அகற்றி விட்டு அரை நிர்வாணமாக ஒரு மேஜையில் படுத்தார். 

பின்னர் தனது உடல் முழுவதும் பேப்பர் நாப்கிளை விரித்தார். அதன் மீது துரித உணவு பொருட்களை பரப்பி வைத்தார். 

தன் உடலின் மீது வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடலாம் என அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் சாப்பாடு கூடத்தில் நடந்தது. இதை அறிந்ததும் ஏராளமானவர்கள் கூடினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். 

அவர்கள் மோனிகா ரோஸ்ட் வேல்ட் உடலின் மீது வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு ருசித்தனர். 
20 நிமிடங்கள் நடந்த இந்த வினோத நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மோனிகா, “இது ஒரு கலை. 

தனது நண்பர்களை கவருவதற்கு மட்டுமின்றி கல்லூரிகளில் இக்கலையை பரப்புவதற்காகவும் இதை செய்தேன்” என்று தெரிவித்தார்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings