கோவை மதுக்கரை அருகே தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஒருவர் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொக்கட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகள் பிரிஸ்க் கில்லா (20).
கோவை மதுக்கரை, மரப்பாலம் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றா மாண்டு படித்து வந்தார்.
இவரது சகோதரியும் அதே கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கல்லூரி விடுதி யிலேயே அறைகளை எடுத்து தனித்தனியாக தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதிக் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து பிரிஸ்க்கில்லா தற்கொலைக்கு முயற்சித்ததாகவும்,
மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக வும் அவரது குடும்பத்து க்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவ மனையில் அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு நேற்று கொண்டு செல்லப் பட்டது. தற்கொலை வழக்காக பதிவு செய்து மதுக் கரை போலீஸார் விசாரித்து வருகி ன்றனர்.
மாணவி யின் உடலைப் பெற்றுச் செல்ல, அவரது குடும்பத் தினர் கோவை அரசு மருத்துவ மனைக்கு வந்திருந்தனர்.
மாணவியின் தந்தை ஏசுதாஸ் கூறும் போது, என் மகள் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக இரு வேறு முரண்பட்ட தகவல் களை எங்களு க்குத் தெரிவித்தனர்.
சாதிரீதி யான பிரச்சினை களும் கல்லூரியில் இருந்து வந்து ள்ளது. மகளின் சாவில் மர்மம் நீடிப்பதால் உரிய விசாரணை நடத்தி, அதில் தொடர்பு டையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.