கும்பகோணம் மகாமக விழாவை யொட்டி ஆட்டோக்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து வட்டாரப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கும்பகோணம் மகாமக விழாவை முன்னிட்டு கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள் 7 இடங்களில் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த இடங்களில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வட்டாரப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் வருமாறு:-
தாராசுரம் நாகேஸ்வரன் தொழிற்பயிற்சி நிலையம் அருகிலிருந்து மகாமக குளம் வரை வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ45 வசூலிக்க வேண்டும்.
வளையப்பேட்டை தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மகாமக குளம் வரை கட்டணம் ரூ50.
அசூர் பஸ் நிலையத்தில் இருந்து மகாமககுளம் வரை கட்டணம் ரூ45. கொரநாட்டு கருப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து
மகாமககுளம் வரை கட்டணம் ரூ50. தற்காலிக பஸ் நிலையமான உள்ளூரிலிருந்து மகாமக குளம் வரை கட்டணம் ரூ45.
செட்டிமண்டபம் பஸ் நிலையத்தில் இருந்து மகாமக குளம் வரை கட்டணம் ரூ40. நாட்டார் தலைப்பு
பஸ் நிலையம் முதல் மகாமககுளம் வரை கட்டணம் ரூ.40. மத்திய பஸ் நிலையம் முதல் ரயில் நிலையத்திற்கு கட்டணம் ரூ25-ம்,
ரயில் நிலையம் முதல் மகாமக குளம் வரை ரூ25-ம் வசூலிக்க வேண்டும். மத்திய பஸ் நிலையம் முதல் மகாமககுளம் வரை ரூ.25-ம், மருதாநல்லூர் முதல் மகாமக குளம் வரை ரூ50 கட்டணம் வசூலிக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 5430 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என வட்டார போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.