தமிழக சட்டப் பேரவை தேர்தலில், தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதாக அக்கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக, அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்,
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் ஆகியோர், திமுக தலைவர் கருணா நிதியை அவரது கோபாலபு ரம் இல்ல த்தில் இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், "தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத் துள்ளது.
வேறு கட்சி களுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுக முடிவு செய்யும். தமிழகத்தில் திமுக தலை மையில் ஆட்சி அமைய வேண்டும்.
வேறு கட்சி களுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுக முடிவு செய்யும். தமிழகத்தில் திமுக தலை மையில் ஆட்சி அமைய வேண்டும்.
சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்ய ப்படும்" என்றார். திமுக கூட்டணி க்கு தேமுதிக வருமா என்ற கேள் விக்கு பதில் அளித்த ஆசாத், அதை திமுக தான் முடிவு செய்யும் என்றார்.
2013ல் காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து திமுக வெளியே றியதே என்ற கேள்விக்கு, அரசியலில் பிரச் னைகள் இருக்கத் தான் செய்யும் என்று பதில் அளித்து நழு வினார் ஆசாத்.