திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம்.. பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். சமத்துவ மக்கள் கட்சியி லிருந்து விலகியுள்ள 2 ஆயிரத்து க்கும் அதிகமான வர்கள்,
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலை யில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசை வாக்கம் தாசப் பிரகாஷ் மண்ட பத்தில் ஞாயிறன்று நடந்தது. 

இந்த நிகழ்ச்சியின் போது நிருபர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது: 

பாஜக கடந்த மக்களவை தேர்தலைப் போலவே வலுவான கூட்டணியை அமைத்து சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும். 

தேமுதிக மாநாட்டில் விஜய காந்தை ‘கிங்’ ஆக்க வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கூறி யுள்ளனர். 
இதற்கு நாங்கள் கவலைப்பட வில்லை. ஏனென்றால் தேமுதிக எங்கள் கூட்டணி யில் தான் உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவித்த கட்சிகள் தான் இதற்காக கவலைப்பட வேண்டும். 

பாஜக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்ப டுவதை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings