வரி செலுத்து வோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர் புடைய ரகசிய எண் களையோ, கடவுச் சொற் களையோ வருமான வரித் துறை கோர வில்லை.
அது போன்ற ரகசிய விவரங் களைக் கேட்டு வரும் மின்னஞ்சல் களுக்கு பதில ளிக்க வேண்டாம் என்று வருமான வரித்துறை பொது மக்களுக்கு எச்சரி க்கை விடுத் துள்ளது.
சமீப காலங் களாக வருமான வரித்துறை யினரின் பெயரில் போலி யான மின்னஞ் சல்களை வாடிக்கையா ளர்களுக்கு அனுப்பி, அவர்களின் ரகசிய தகவல் களை கேட்டுப் பெற்றது சில போலி மின்னஞ் சல்கள்.
இது குறித்து வருமான வரித்துறை யினருக்கு பல புகார்கள் சென்றன.
இதையடுத்து இது தொடர்பாக வருமான வரித்துறை வெள்ளிக் கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதில், மின்னணு நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி செலுத்து வோருடனான வழக்க மான தொடர்புகள் அனைத் தையும்,
மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக வருமான வரித் துறை மேற் கொண்டு வருகிறது.
வருமான வரித் துறையின் அடையா ளத்தை தவறாகப் பயன் படுத்தி, போலி யான மின்னஞ் சல்களை அனுப்பும் மோசடியா ளர்களைத் தடுக்க நடவடி க்கை மேற் கொண்டு வருகிறோம்.
வரி செலுத்து வோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர்பு டைய ரகசிய எண்க ளையோ, கடவுச் சொற்களையோ வருமான வரித் துறை எப்போதும் கோர வில்லை.
அதுபோன்ற ரகசிய விவரங் களைக் கேட்டு வரும் மின்னஞ்ச ல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
மேலும், அந்த மின்னஞ்சல் களுடன் வரும் இணைப்பு களையும் திறந்து பார்க்க வேண்டாம் என்றும் கூறப்பட் டுள்ளது.
Tags: