போதையாக்கும் உணவுகள் !

1 minute read
உணவுகளை உட்கொள்ளும் நாம் சில நேரங்களில் நமக்கு பிடித்தமான உணவுகளுக்கு அடிமையாகி விடுகிறோம் (Addiction). ஆனால், நாம் எந்த உணவுக்கு அடிமையாகி விடுகிறோமோ, அந்த உணவுகள் நம்முடைய செயல் பாடுகளை பாதிக்க வாய்ப்புள்ளது.


சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மாணவர் களுக்கு அதிகம் பிடித்த உணவாக முதலில் சொக்லெட், இரண்டாவதாக ஐஸ்க்ரீம், பீட்சா போன்றவை இடம் பெற்றுள்ளன.

இவைகளை சாப்பிடுவது முக்கியமல்ல, ஆனால் இவற்றினை தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

என்ன காரணம்?

மனிதனின் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி போன்ற உணர்வுகளுக்கு காரணமான ஹார்மோன் களை சுரக்கச் செய்வதில் உணவின் பங்கு அதிகம்.

குறிப்பாக டோபமைன் (Dopamine) மற்றும் அட்ரினலைன் (Adrenaline) ஹார்மோன்கள் சுரப்புக்கு உணவு காரணமா கிறது. 

உதாரணமாக சொக்லெட், ஐஸ்க்ரீம், மைதா உணவுகளான பீட்சா,  பர்கர் மற்றும் சோளமாவு, உருளைக் கிழங்கு, மது போன்ற வற்றை உட்கொள்ளும் போது மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது.

சிலர் காபி, டீ குடிக்கும்போதும் சிகரெட் பிடிக்கும் போதும் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பது போல உணர்வார்கள். 

கஃபைன், புகையிலைப் பொருட்கள் ஆகியவையும் சுறுசுறுப்பு தரும் அட்ரினைல் ஹார்மோன் சுரப்புக்குக் காரண மாகின்றன.


அதாவது, ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு சலீப்பு ஏற்படுகிறது, எனவே சுறுசுறுப்பை தரும் உணவுகளை உட்கொள்ளும் நீங்கள், நாளடைவில் உங்களை அறியாமலேயே அந்த உணவு களுக்கு அடிமையாகி விடுகிறீர்கள்.

சில வருடங்கள் இந்தப் பழக்கத்தை தொடரும் போது மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கி உங்கள் செயல்களை முடக்கி விடுகிறது. கட்டுப் பாட்டை இழக்கும் மூளை சுய நினைவை இழக்கிறது.

பதற்றம், விரக்தி போன்ற விபரீத செயல் பாடுகளுக்கும் தூண்டப் படுகிறீர்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கி றார்கள்.மொத்தத்தில், நீங்கள் எந்த உணவினை எடுத்துக் கொண்டாலும், அதனை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள், 

உங்களுக்கு உற்சாகம் வேண்டும் என்பதற் காக நீங்கள் அதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு ஒருவித போதையை தருகிறது என்றே அர்த்தம்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings