நடைகள் பலவிதம் அதில் நீங்கள் எந்த விதம் !

நம்முடைய பழக்கவழக்கத்தை பொறுத்து நடையின் பலன்கள், தாக்கங்கள் வேறுபடும். எனிலும் பொதுவாக எந்த நடையாக இருந்தாலும் நல்ல நலம் அருமையான பலன்கள் கிட்டுகின்றன.
நடைகள் பலவிதம் அதில் நீங்கள் எந்த விதம் !
அது உறுதி, செய்நன்றி, பலன் எதிர்பாரா நன்றி, என நன்றிகள் பலவகை இருப்பதுபோல் நடைகளும் பலவகையாக உள்ளன.

நோய் வந்தபின் நடைப்பயிற்சியா?

நோய் முற்றியபின் நடைப்பயிற்சியா?

உடல் குண்டானப் பின் நடையா?

வரும் முன் காத்தலுக்கான நடையா?

மருத்துவரின் கட்டாயத்திற்காக நடையா?

மனைவியின் வற்புறுத்தலுக்கான நடையா?

ஆர்வத்தினால் ஏற்படும் நடைப்பயிற்சியா?

சுறுசுறுப்பிற்கான நடையா?

தொப்பை குறைப்பதற்கான நடையா?

போட்டிக்கான நடையா?

உணவு ஜீரணத்திற்கான நடையா?

விரும்பித் தொடரும் நடையா?

திணறும் குழந்தை நடையா?

பொழுதுபோக்கிற்கான நடையா?

ஆரோக்கியம் தொடரும் நடையா?

வாழ்வும் நடையும்:

1) பயணநடை

2) தலயாத்திரை நடை

3) கோயில், சுற்று மலை கிரிவல நடை

4) கோரிக்கை, அரசியல் நடைபயணம் &

5) விரதநடை

6) மலைப் பிரதேச நடை

7) வசதிகள் இல்லா நடை
நடைகள் பலவிதம் அதில் நீங்கள் எந்த விதம் !
தீமி நடை

9) படிகட்டு நடை

10) திருவிழா நடை

11) பஜனைப் பாடல் நடை

12) கல்யாண ஊர்வல நடை

13) சுற்றுல நடை

14) அடிவலம், அடிபிரதட்சன நடை

தொழிலும் நடையும்:

1) ஆடு, மாடு, மேய்த்தல் நடை

2) வயல்வெளி நடை

3) அலுவலகம் செல்லல் நடை

4) விற்பனை தொழல் புரிதலுக்கான நடை

5) வேட்டையாடுதல் நடை

6) காட்டு வழி நடை

7) விளையாட்டு அன்பர்கள் நடை

நடையும் இடமும்

1) புல்தரை நடை

2) மணல் நடை

3) ரோட்டு நடை

4) காட்டு வழி நடை

5) மாடி வீட்டு நடை

6) கடல் நீரில் நடை

7) ஆற்று நீரில் நடை
மலைமேல் நடை

9) நெருப்பில் நடை

10) கடற்கரை நடை

11) மாடிப்படி நடை

12) கூழாங்கல் நடை

13) பார்க் நடை

14) விளையாட்டு மைதான நடை
நடைகள் பலவிதம் அதில் நீங்கள் எந்த விதம் !
இயல்பான நடையும் அதன் தன்மையும்:

சிங்கநடை, சிருங்கார நடை, துள்ளல் நடை, உவகை நடை, அழகு நடை, ஆர்ப்பாட்ட நடை, அலப்பல் நடை, அமைதி நடை, ஆணவ நடை, அகங்கார நடை, சோக நடை, சுகமான நடை, 

இயல்பான நடை, இணக்கமான நடை, காக்கா நடை, நொண்டி நடை, தூக்க நடை,  போலீஸ் நடை, வீரர்கள் நடை, ராஜ நடை, குழந்தை நடை, கோபநடை, நாடி தளர்ந்த நடை, கூனல் நடை,

நிமிர்ந்த நடை, கம்பீர நடை, சீரான நடை, தாளநடை, அன்ன நடை, மயில் நடை, தியான நடை, எட்டு நடை, நாலு நடை.

நடையும் நலமும்

நமது வாழ்வில் இயல்பாக இருக்க வேண்டும். விரும்பி நடந்தால் நாளெல்லாம் வாழ்வில் நலத்திற்குப் பஞ்சமில்லை & நாடி நடந்தால் நாளெல்லாம் சுகமே, நலமே கிட்டும். அற்புத தூக்கம் உடலைத் தாலாட்டும்.

நடை நல்ல நலக் கொடையாகும்

நடை நல்ல மருந்தாகும்

நடை நல்ல உடற்பயிற்சியாகும்

நடை நல்ல ஆரோக்கிய கவசமாகும்.

பெட்டிச் செய்தி:

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயம் பசியின்மை நோய் விரைந்து விலகி பசி மேம்படும். சிலருக்கு அகோரப் பசி ஏற்படும். 

அப்போது சரியான, சிறப்பான, ஆல்கலைன் உணவுகளைச் சாப்பிட்டால் மறுபடி எடை கூடாமல் சரி செய்யலாம்.
நடைகள் பலவிதம் அதில் நீங்கள் எந்த விதம் !
இது பலரின் அனுபவ உண்மை. சிறப்பான ஆல்கலைன் உணவுகள் கனிகளும் கொட்டைப் பருப்புகளும் & அவைகள் சிறப்பான இயற்கை உணவுகளாகும்.

உடனடி சக்தியும், தெம்பும் இயற்கை உணவில் இலகுவாக, இயல்பாக, இணக்கமாகக் கிட்டுகின்றன.
Tags:
Privacy and cookie settings