நித்திரை இல்லாவிட்டால் உங்கள் ஊக்கம் குறையும் !

1 minute read
இன்றைய பரபரப்பான உலகில் மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மன உளைச்சல், தலைவலி


இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் அவரது செயல் திறனும் வெகுவாக பாதிகப்படும். குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் பிரச்சனை, 

மூக்கில் சதை வீக்க பிரச்சனை, மூக்கு எலும்பு வளைந்திருத்தல் ஆகியவை காரணமாக மூச்சு தடைபட்டு, தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. 

பெரியவர் களைப் பொருத்தவரை உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உரிய தூக்கம் இல்லாமல் போய் விடும்.

குறட்டை விட்டு தூங்குவது என்பது, தூக்கத்துக்கு ஏற்படும் தடைஎன்பதும், அது ஒரு உடல்நலக் குறைபாடு என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறட்டை விடுவோருக்கு அந்த குறைபாடு தெரியாது என்பதால் மனைவி அல்லது வீட்டில் உள்ளோர் கவனித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்வது மிக முக்கியம். 
நித்திரை


ஒருவருக்கு குறட்டை பிரச்சனை உள்ள நிலையில், மருத்துவ மனையில் தூங்க வைத்து, தூக்க அளவை மதிப்பீடு செய்ய ஸ்லீப் லேப் என்று அழைக்கப்படும் பரிசோதனை வசதி உள்ளது.

இந்த பரிசோதனை மூலம் தூக்கம் தடை படுவதை மதிப்பீடு செய்து குறட்டை பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். 

தீவிர குறட்டை பிரச்சனை உள்ளோர், பயன்படுத்த வசதியாக சிபேப் கருவி சிகிச்சை முறையும் பயன் பாட்டில் உள்ளது.
Tags:
Today | 15, April 2025
Privacy and cookie settings