டெட்டால் போல் சிறுநீர் சிறந்த கிருமி நாசினி...லாலு | If the urine is the best disinfectant, as the Tettol !

டெட்டாலை போல், சிறுநீரும் சிறந்த கிருமி நாசினிதான் என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ''ஆங்கில முறை மருத்துவம் என்பது அறுவை சிகிச்சை மட்டும்தான். ஆனால், ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்த முடியும். இதில் பக்க விளைவுகள் கிடையாது.

முன்பெல்லாம் நாம் சிறுவர்களாக இருந்தபோது ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் சிறுநீர் விடுவோம். இது காயம்பட்ட இடத்தில் கிருமி நாசினியாக செயல்பட்டு, அந்த காயம் புண்ணாக மாறாமல் தடுத்தது.

அவசர காலத்தில் சிறுநீர் நமக்கு மருந்தாக பயன்பட்டது. ஆனால், இப்போது மக்கள் டெட்டால் பயன்படுத்துகிறார்கள். அதைக் கொண்டு கை கழுவுகிறார்கள். இதுதான் நமது முன்னேற்றம். 

ஆனால், டெட்டாலை போல் சிறுநீரும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடியதுதான்" என்றார். லாலுவின் பேச்சை கேட்டு, அந்த அரங்கில் இருந்தவர்கள் எழுப்பிய சிரிப்பலை அடங்குவதற்கு சிறிது நேரம் ஆனது.
Tags:
Privacy and cookie settings