தேமுதிக கூட்டணி பேச்சுக்கு வந்தால் நல்ல முடிவு கிட்டும்: ஸ்டாலின் | If we get a good result escalator coalition talks: Stalin !

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில் செய்தியா ளர்களை சந்தித்த ஸ்டாலின், கருணாநிதி அழைப்பை ஏற்று விஜயகாந்த் பேச்சு வார்த்தைக்கு வந்தால் கூட்டணி விவ காரத்தில் நல்ல முடிவு கிட்டும் என்றார்.
முன்னதாக இன்று (சனிக் கிழமை) காலை, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பி னரும் மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணா நிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி யானதை தெரிவி த்தார்.

அதன் பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "தமிழக தேர்தலில் திமுகவு டன் கூட்டணி அமைக்க முழு ஒத்துழைப்பு அளிப்ப தாக குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

திமுக தலைமை யில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இருப்பினும் இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சும் நடை பெறவில்லை.

புதுச்சேரி யிலும் திமுக - காங்கிரஸ் கூட்டாக தேர்தலை எதிர் கொள்ளும். கூட்டணி க்கு மற்ற கட்சிகள் வந்தால் வரவேற்கி றோம். ஏற்கெனவே தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத் துள்ளார்.

 அந்த அழைப்பை ஏற்று விஜய காந்த் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கூட்டணி விவகார த்தில் நல்ல முடிவு கிட்டும்" என்றார்.
Tags:
Privacy and cookie settings