கொழும்பில் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்! பின்னணி என்ன?

கடந்த வருடத்தில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 998 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

ஹன்வெல்ல, சீதாவக்க, கடுவெல, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இளம் பெண்கள் கர்ப்பமடைந்துள்ள 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. 

பரம்பரை ஆபத்து நடத்தைகள், தாய் வெளிநாட்டில் வசிக்கும் குடும்பங்கள், பாடசாலைகளை கைவிட்ட சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள், காதல் விவகாரங்களில் முறிவு, 

வறுமை, புதிய குடும்பங்களில் மதுபாவனை அதிகரித்தல் மற்றும் அரசாங்கத்தின் பொதுநல மற்றும் சமூக சேவை திட்டங்கள் மேற் கொள்ளாமை

மற்றும் குடும்பம் தொடர்பில் முறையான கண் காணிப்பின்மையே இந்த நிலைமைகளுக்கு பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைக்கு அருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு வேலைத் திடங்களுக்காக பாடசாலை அதிபர்களின் ஆதரவு குறைவடைதல் 

மற்றும் ஆலோசனை ஆசிரியர்கள் இதற்காக பங்களிப்பு வழங்காமை மற்றும் அதிகாரிகளின் ஆதரவு குறைவடைதலும் இந்த நிலைமைகளுக்கு காரணமாகியுள்ளது. 

பாடசாலை சிறுவர் பராமரிப்பு குழுகள் 125 கொழும்பு மாவட்டத்தினுள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் 

அவற்றில் 32 மாத்திரமே செயற்படுத்தப் பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இந்திக்க தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings