ஹீமோ குளோபின் என்னும் புரோட்டீன் தான் இரத்தம் சிவப்பாக இருக்க முக்கிய காரணம். உடலில் ஹீமோ குளோபின் அளவை பராமரிக்க இரும்புச்சத்து தேவைப் படுகிறது.
எலும்பு மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகும் இரத்த செல்களானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்து விடும். எனவே உடலில் இரத்த செல்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
உடலில் ஹீமோ குளோபின் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். எனவே ஹீமோ குளோபினை அதிகரிக்க அன்றாடம் 8-10 மிகி இரும்புச் சத்தைப் பெற வேண்டுமென்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் 13-45 வயதிற்குட்பட்ட பெண்கள் தினமும் 20 மிகி இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, இரும்புச் சத்தை உடல் உறிஞ்சு வதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்
இங்கு உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது எப்படி என்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப்படித்து அவற்றைப் பின்பற்றினால், இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
இரும்பு சத்துள்ள உணவுகள்
ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து இன்றியமையாது என்பதால், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம்.
உதாரணமாக, பேரிச்சம் பழம், மாட்டிறைச்சி, கீரைகள், உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு போன்ற வற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
ஃபோலிக் ஆசிட் உணவுகள்
வைட்டமின் பி9 அல்லது ஃபோலிக் ஆசிட்டுகளும் இரத்த சிவப்பணுக் களின் உற்பத்திக்கு அவசியமானது. எனவே ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு களையும் தினமும் உட்கொள்ள வேண்டும்.
இந்த ஃபோலிக் ஆசிட் பசலைக்கீரை, நட்ஸ், பச்சை பட்டாணி, கேல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் பி12 உணவுகள்
உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தாலும் , இரத்த சிவப்பணுக் களின் உற்பத்தியில் இடையூறு ஏற்படும்.
எனவே மீன், முட்டை, ஆட்டு ஈரல் மற்றும் பால் பொருட்களை உட்கொண்டு வந்தால், இந்த குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் இரும்புச் சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் சி ஏராளமாக நிறைந்துள்ளது.
எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. இச்சத்து இரும்பு சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவும். எனவே இதனை அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப் படுவதை அதிகரிக்க லாம்.
பயறு வகைகள்
பயறு வகைகளான தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற வற்றிலும் இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் சி உள்ளதால், இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்கலாம்.
மேற்கூறிய உணவுப் பொருட்களுடன், தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், இரத்த சிவப்பணுக் களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும்.
மதுவை நிறுத்தவும்
ஒருவரின் உடலில் இரத்தத்தின் அளவு குறைவதற்கு ஆல்கஹாலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருப்பதற்கு முதலில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.