அம்மாவின் அடிமையில் என்னை அடிச்சுக்க ஆள் உண்டா?

அம்மா வாழ்க.. அம்மா வாழ்க…!' எம்.எல்.ஏ.வின் அசத்தல் ஜலபிரதட்சணம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி அசத்தி வருகின்றனர். 
அம்மாவின் அடிமையில் என்னை அடிச்சுக்க ஆள் உண்டா?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் 24ம் திகதி வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் 122 கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடந்தன. 

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் யாகங்களும், அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கோ பூஜையும் கோவில்களில் நடந்தது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா வித்தியாசமாக ஜலபிரதட்சணம் செய்துள்ளார்.

மதுரை காந்தி மியூசியம் அருகிலுள்ள அரசு நீச்சல் குளத்தில் காலை ஏழு மணிக்கு இறங்கிய கருப்பையா, மல்லாக்க படுத்துக் கொண்டு நீரில் மிதக்க ஆரம்பித்தார். 

இதனை கட்சியினரும், பொது மக்களும் கூட்டம் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 
அவர் இன்றைய நாள் முழுவதும் மிதக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்தில் ‘அம்மா வாழ்க…அம்மா வாழ்க…!’ என்று கோஷம் போட்டு விட்டு கிளம்பி விட்டார் கருப்பையா. 

அடிக்கடி இதே முறையை கடைபிடிக்கும் கருப்பையா, ஜெயலலிதா சிறையில் இருந்த போதும் சோழவந்தான் கோயில் கிணற்றுக்குள் அரை நாள் மிதந்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings