தீவிரவாதி தான் இஷ்ரத் ஜஹான்.. ஹெட்லி !

குஜராத்தில் 2004-ம் ஆண்டு போலி என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டதாக கூறப்படும் இஷ்ரத் ஜஹான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி என டேவிட் ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தீவிரவாதி தான் இஷ்ரத் ஜஹான்.. ஹெட்லி !
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப் பட்டு அமெரிக்கா வில் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் டேவிட் ஹெட்லி சிறப்பு நீதிமன்ற த்தில் நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னி லையில் வீடியோ மூலம் 3-வது நாளாக சாட்சி அளித்து வருகிறார்.

அவர் கூறும்போது, மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா இயக்க த்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி" எனத் தெரிவித் துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் வழக்கும் இந்திய அரசியலும்:

கடந்த 2004-ம் ஆண்டு இஸ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் குஜராத்தில் என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த என்கவு ண்டர் போலி யானது என வழக்கு தொடரப்பட்டது. 

என்கவுண்டரை குஜராத் போலீஸும், சிறப்பு புலானாய்வு அமைப்பும் இணைந்து நடத்தி யதாக குற்றஞ் சாட்டப் பட்டது.
இந்த வழக்கில் மோடியின் நெருங்கிய சகாவும், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்ச ருமான அமித் ஷா மீதும் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் அமித் ஷாவுக்கு கடந்த 2014-ல் சிபிஐ நற்சான்று வழங்கியது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடைய நபர் குறித்து ஹெட்லி இவ்வாறாக கூறியிருப்பது பல்வேறு விமரசன ங்களையும் எழுப்பும் சூழலை ஏற்படுத்தி யுள்ளது.

ஹெட்லியின் இன்றைய வாக்குமூலம்:

1. மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி.
தீவிரவாதி தான் இஷ்ரத் ஜஹான்.. ஹெட்லி !
2. லஷ்கர் இ தொய்பாவுடன் எனக்கு இருந்த தொடர்பு குறித்து தஹாவூர் ராணாவுக்கு தெரியும்.

3. மும்பை தாக்குதலிக்கு முன் ராணா இந்தியா வந்தார். என்னை இந்தியாவி லிருந்து சென்று விடுமாறு அறிவுறுத் தினார்.

4. 2006-ல் இந்தியா வருவதற்கு முன்னதாக மேஜர் இக்பாலிடம் 25,000 அமெரிக்க டாலர் பெற்றேன்.

5. லஷ்கர் இ தொய்பாவின் அபு காஃபா கராச்சி யில் ஒரு கட்டுப் பாட்டு அறையில் இருந்து கொண்டு மும்பை தாக்கு தலில் ஈடுபட்ட 10 தீவிரவாதி களையும் இயக்கினார்.

இந்தத் தகவல் களை அளித்து ள்ளார். வாக்கு மூலம் பதிவு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
Tags:
Privacy and cookie settings