பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நோக்கி வெடிகுண்டு எனக்கூறி இளைஞர் ஒருவர் மர்ம பொட்டலத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பெங்க ளூரு ரவீந்திர கலாஷேத்தர மண்டபத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது.
மேடையில் சித்தரா மையா பேசிகொண் டிருக்கும் போது முதல் மாடியில் நின்று கொண்டிருந்த இளைஞர் இடை மறித்து தங்களது சமூகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது கையில் இருந்த மர்ம பொட்ட லத்தை மேடையை நோக்கி வீசிய போது வெடி குண்டு என சப்தமி ட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் உடனடியாக பொட்டலத்தை அப்புற படுத்தி சோதனை யிட்டதில் அதில் சாக்லேட்கள் மட்டும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனை வீசியவரை கைது செய்து விசாரி த்ததில் அவர் பகுஜன் சாமாஜ் கட்சி நிர்வாகி பிரசாத் என்பது தெரிய வந்தது.
வெடி குண்டு எனக் கூறி பொட்ட லத்தை வீசியது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகி ன்றனர்.
Tags: