விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூ ரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா,
சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூ ரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தனர்.
அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசார ணையில் தெரிய வந்தது.
ஆனால் மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றும், அவர்களை கொலை செய்து கிணற்றில் வீசி விட்ட தாகவும் அவர்களின் பெற்றோ ர்கள் புகார் அளித்தனர்.
இதை யடுத்து கல்லூரி தலைவர் சுப்பிர மணியன், தாளாளர் வாசுகி (சுப்பிர மணியன் மனைவி), இவர்களது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி
முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை கைது செய்தனர்.
கல்லூரி தாளாளர் வாசுகி, சென்னை தாம்பரம் கோர்ட்டிலும், வெங்கடேசன் சைதாப் பேட்டை கோர்ட்டிலும் சரண் அடை ந்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று முன்தினம் உத்தர விட்டார்.
இதை யடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாணவிகள் உயிரிழப்பில் சந்தேகம் என ஐகோர்ட்டில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து 3 பேர் மரணம் தொ டர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், விழுப்புரம் தனியார்
கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில், மாணவிகள் நீரில் மூழ்கி இறந்திருந்தால், அவர்களது நுரையீ ரல்களில் தண்ணீர் நிரம்பி யிருக்கும். ஆனால், பிரேத பரிசோத னையில், அவ்வாறு இல்லை.
எனவே, மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்க வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டி ருப்பதை அடுத்து, மறுபிரேத பரிசோதனை அறிக்கை தேவையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மாணவியின் பெற்றோர், இது குறித்து தங்களது மருத்து வர்களிடம் ஆலோ சனை பெற்ற பிறகே கூற முடியும் என்று பதில் அளித்ததை அடுத்து வழக்கு விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.