ஆச்சர்யம் மோடி ஒன்றரை மாசமா வெளிநாடு போகலையாம் !

நரேந்திரமோடி 2014-ம் ஆண்டு, மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்ற பின், அடிக்கடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் குறித்து ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை அவ்வப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஆச்சர்யம் மோடி ஒன்றரை மாசமா வெளிநாடு போகலையாம் !
மோடியின் இந்தியப் பயணம் என்று தினசரிகளில் செய்தி வராத குறைதான். மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் அதிகரித்து இருந்தாலும்,

எதிர்க்கட்சிகள் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், மக்களின் வரிப் பணத்தை மோடி வீணடிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதைத் தொடர்ந்து 2016–ம் ஆண்டில், வெளிநாட்டு பயணத்தை பெருமளவு மோடி குறைக்கப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 
 
சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் மட்டுமே மோடி கலந்து கொள்வார் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

குறிப்பாக 2016-ல் அமெரிக்காவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு, பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாடு, 
சீனாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாடு உட்பட குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளில் மட்டுமே மோடி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

மோடியின் வெளிநாட்டு பயணத்தைப் பொறுத்த வரை 2014-ம் ஆண்டு, 7 மாதங்களில் 9 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்பின் 2015-ம் ஆண்டில் மட்டும் 28 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 2015-ல் மட்டும் 54 நாட்கள் இந்தியாவுக்கு வெளியே மோடி இருந்துள்ளார்.

அதாவது 2014, நவ 26-ம் தேதி முதல் 2015, மார்ச் 9-ம் தேதி வரை 72 நாட்கள் உள்நாட்டில் மோடி இருந்துள்ளார். 
 
இப்போது, அதாவது கடந்த 2015 டிசம்பர் 25 லிருந்து வெளிநாட்டு பயணம் ஏதுமின்றி இன்று வரை 47 -வது நாளாக உள்நாட்டில் மோடி இருந்துள்ளார்.
கடைசியாக டிச, 23-25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வரும் வழியில் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார் மோடி. 
 
அதன்பின் கடந்த 47 நாட்களாக வெளிநாடுகளுக்கு செல்லவில்லை. வரும் மார்ச் 31-ம் தேதி, அமெரிக்காவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். 
 
இதனால் இனி மார்ச் 31-ல்தான் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதால் 72 நாள் என்ற பழைய ரெக்கார்டை பிரேக் செய்வார் என்று எதிர்பார்க்கப் டுகிறது.
ஆச்சர்யம் மோடி ஒன்றரை மாசமா வெளிநாடு போகலையாம் !
அடிக்கடி வெளிநாடு பயணம் போவது சரியா? என மோடியிடம் இதற்கு முன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, 
 
அதற்கு அவர், நாம் பெரிய நாடு என்ற தோரணையில், அகங்காரமாக பிற நாடுகளை புறக்கணித்தால், அதன் இழப்பை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது.

உலக அரங்கில் இந்தியா தனித்து வைக்கப்படுவதால் நமக்கு தீமைதான். முந்தைய ஆட்சியாளர்களுக்கு, எனது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. 

எனவே, எனது வெளிநாட்டு பயணங்களிலும், நான் எத்தனை நாள் சுற்றுப் பயணம் செய்கிறேன் என்பதிலும் கவனம் வைத்துள்ளனர்” என்று பதிலளித்துள்ளார்.
ோடி நின்னா குத்தம், நடந்தா குத்தம், உக்காந்தா குத்தம் மாதிரி, வெளிநாட்டுக்கு போனா ஒரு செய்தி, போகலைனா ஒரு செய்தியானு கேட்காதீங்க பாஸ். 
 
மோடி ஒன்றரை மாசமா வெளிநாடுக்கு போகாமல் இருப்பதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...?
Tags:
Privacy and cookie settings