தேமுதிக வைச் சேர்ந்த 8 சட்ட மன்ற உறுப்பி னர்கள ராஜினாமா செய்ததால் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை விஜயகாந்த் இழந்து விட்டார்.
இதனை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். 8 அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. க்களோடு, பாமக, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 2 சட்ட மன்ற உறுப்பி னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
10 பேரின் ராஜினா மாவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால், தேமுதிக எம்.எல்.ஏ. க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் தகுதியை விஜயகாந்த் இழந்தார் என்று அறிவித்தார்.
தேமுதிக-வின் அதிருப்தியா ளர்களான, சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன், சாந்தி, சுரேஷ் குமார், பாண்டிய ராஜன், அருள் அழகன்,
அருண் சுப்பிர மணியம் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய, புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ. ராமசாமி, பாமக வின் எம்.எல்.ஏ-வான கலையரசு ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்கள் இன்று சட்ட மன்றச் செயலர் ஜமாலுதீனிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் நடை முறையில் இருப்ப தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே வேறு கட்சிக்குச் செல்ல முடியும்.
இந்நிலை யில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா வைச் சந்தித்தி ருப்பதால் இவர்கள் அதிமுக-வில் சேரலாம் என்று எதிர் பார்க்கபப்டு கிறது.