ஓராண்டை நிறைவு செய்கிறது ஆம் ஆத்மி !

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) ஓராண்டை நிறைவு செய்கிறது. இதில் மக்கள் முன் துறை வாரியான சாதனைகளை பட்டியலிட திட்டமிடப் பட்டுள்ளது.
ஓராண்டை நிறைவு செய்கிறது ஆம் ஆத்மி !
யூனியன் பிரதேசங்களில் ஒன்றான டெல்லியில் பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் உள்ளன. இதனால் தேர்தல் வாக்குறுதிப்படி பல்வேறு திட்டங் களை செயல்படுத்த முடியவில்லை

என்றும் இதையும் மீறி மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணத்தை குறைத்தது உட்பட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது. 

இந்நிலை யில் அக்கட்சி வரும் 14-ம் தேதி தங்கள் ஓராண்டு ஆட்சி யின் பணிகளை மக்கள் முன் பட்டியலிட முடிவு செய்துள்ளது.

‘ஏக் சால் பேமிசால் (ஈடு இணை யில்லா ஒரு வருடம்)’ என்ற பெயரில் அனைத்து அமைச்ச கங்களின் சாதனைகளை தீவிரமாக விளம்பரப் படுத்தவும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

இதன் தொடக் கமாக டெல்லி யின் முக்கிய அரங்கில் வரும் 14-ம் தேதி பெரிய விழா நடத்தவும் திட்ட மிடப் பட்டுள்ளது. 

கேஜ்ரிவால் தனது உடல் பரிசோதனைக்கு பின் பெங்களூருவில் இருந்து திரும்பிய பிறகு நடத்திய அமைச் சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப் பட்டது. 
இது குறித்து தி இந்துவிடம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தாங்கள் ஓர் ஆண்டில் செய்த சாதனைகளை அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் ஏற்படுத்திய தடையால் சிக்கியி ருக்கும் திட்டங்கள் குறித்தும் குறிப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது. 

இப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு, முதன்மை செயலாளரான ராஜேந்திர குமாரிடம் ஒப் படைக்கப் பட்டுள்ளது என்றார்.
ஓராண்டை நிறைவு செய்கிறது ஆம் ஆத்மி !
கேஜ்ரிவால், துறை வாரியாக தன்னிடம் சமர்ப்பிக் கப்படும் அறிக் கைகளில் எவற்றி லாவது திருப்தி அடையாவிட்டால், சம்பந்த ப்பட்ட அமைச்சர் களை மாற்றவும் திட்ட  மிட்டுள்ள தாகக் கூறப் படுகிறது. 

எனவே இம்மாத இறுதியில் கேஜ்ரிவால் தனது அமைச்சரவை யில் மாற்றம் செய்யவும் அதிக வாய்ப் புள்ளதாக கூறப் படுகிறது.

ஓராண்டு சாதனை களை விளக்கி முழு அரசியல் லாபத்தை பெற முயலும் கேஜ்ரிவால், இதை தங்கள் கட்சி போட்டியிட உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பயன் படுத்த இருக்கிறார். 

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக மாநில தலைவர் சதீஷ் உபாத்யாய கூறும் போது, “தலித்து களுக்கும், ஏழைக ளுக்கும் எதி ரான கேஜ்ரிவால் அரசுக்கு ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட அருகதை இல்லை.

ஆட்சிக்கு வந்தால் மாநகராட்சி தற்காலிகப் பணியா ளர்களை நிரந்தரமா க்குவதாக கேஜ்ரிவால் கூறினார். ஆனால் துப்புரவு பணி யாளர்களுக்கு கூட இந்த வாக் குறுதி நிறைவேற்றப் படவில்லை.

டெல்லி அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக ஊழல் மற்றும் மோசடி வழக்கு களில் சிக்கி வருகி ன்றனர். இது போன்ற பல காரண ங்களால் இந்த அரசு மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து ள்ளது.
ஓராண்டை நிறைவு செய்கிறது ஆம் ஆத்மி !
இவர் களுக்கு பஞ்சாபில் ஒரு தொகுதி யில் கூட வெற்றி கிடைக்காது” என்றார். கடந்த 2013 டிசம்பரில் டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் போட்டி யிட்ட ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறை வேற்ற முடிய வில்லை என்று கூறி 49 நாள் ஆட் சிக்கு பின் கேஜ்ரிவால் பதவி விலகி னார். 

பின்னர் 2015 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பா ன்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
Tags:
Privacy and cookie settings