கோவை நகரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் கோட்டலாங்கோ லியோன். இவர் இந்த ஆண்டிற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்.
சினிமா துறையில் இந்த ஆண்டு பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டறிந்து பெரும் பங்காற்றியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசை, நடிப்பு ஆகியவற்றை கவுரவிக்க ஆஸ்கார் அவார்ட் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில் சினிமா துறையில் அறிவியல் , பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறையிலும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவை தனது தாயகமாகக் கொண்ட கோவைக்காரரான இவர் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான சாதனையை செய்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னர்அறிவிக்கப்பட்ட போது இந்த தொழில்நுட்ப விருது, இந்தியாவை சேர்ந்த ராகுல் தாக்கர் என்பவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்த்து நம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தேர்வு பெற்றுள்ளார்.அவர்தான் கோட்டலாங்கோ லியோன் ஆவார்.
வெளிநாடு வாழ் இந்தியரான இவர் அமெரக்காவின் கலிபோர்னியா நகரத்தில் மனைவி,குழந்தைகள் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் " நான் வழக்கம்போல் எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.
இத்தகவல் எனக்குக் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை.இதற்காக என் மேல் அக்கறை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெளிச்சம் விரும்பவில்லை.இருப்பினும் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கவே இந்த பதிவு". என தனது மகிழ்ச்சி மற்றும் நன்றியை பகிர்ந்து உள்ளார்.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி இந்த தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன.மற்றும் பல முக்கிய விருதுகள் அடுத்த 28 ஆம் நாள் வழங்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.