ஒல்லி அழகிகளுக்கு தடை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் !

பிரான்சில் உடல் மெலிந்த மாடல் அழகிகள் விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கும் பொருட்டு புதிய சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளனர். 
ஒல்லி அழகிகளுக்கு தடை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் !
பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு இயற்றப்படும் இந்த புதிய சட்டத்தினால் மருத்துவர்களின் சான்றிதழ் இன்றி மாடல் அழகிகளை அனுமதிக்கப் படமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

உரிய மருத்துவ சான்று இல்லாத மாடல்களை பணியில் அமர்த்தும் நிறுவனத்திற்கு பெருந்தொகை பிழை விதிக்கப்படும் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடுமையான இந்த புதிய சட்டத்தினை வழிமொழிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான வேரன், 

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் மெலிதல்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது என்றார். 

இந்த சட்டம் அமலுக்கு வருவதை அடுத்து இனி பிரான்ஸ் நாட்டில் அதிக உடல் எடை குறைக்கும் பொருட்டு மாடல் அழகிகளை தூண்டுவது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளனர். 
பிரான்ஸ் நாட்டில் பல பெண்கள் பேஷன் ஷோக்களில் பங்கேற்று பணம் குவிக்க மாடல் அழகிகளாக ஆசைப்படுகின்றனர். 

அதற்காக உடல் எடையை குறைக்கும் பொருட்டு போதிய உணவு எடுத்துக் கொள்ளாமல் பட்டினி கிடக்கின்றனர்.

இதனால் பிரான்சில் மட்டும் தற்போது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெண்கள் பசியின்மை நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings