வர மறுத்த மாணவியை இழுத்து சென்ற போலீஸ் !

சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி… டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப் பட்டதை எதிர்த்து புரட்சிகர இளைஞர் கழகம் (RYA),
வர மறுத்த மாணவியை இழுத்து சென்ற போலீஸ் !
அகில இந்திய மாணவர் கழக (AISA) த்தினர், நுங்கம் பாக்கத்தில் உள்ள (மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்தி ருக்கும்) சாஸ்திரி பாவனை முற்றுகை யிட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை, போலீசார் வலுக்கட்டா யமாக இழுத்து போகும் காட்சிகளும், அதற்க்கு அவர்கள் மேற் கொண்ட முயற்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ய பெண் போலீசார் இல்லாததால், உதவி கமிஷனர் மற்றும் எஸ்.ஐ ஆகியோர் கயிறு கட்டி இழுத்து செல்கின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, கயிறு கட்டி இழுத்து செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால், மகளிர் போலீசை அழைத்து, அந்த பெண்ணை தூக்கிச் செல்ல உத்தர விடுகின்றனர். 
வர மறுத்த மாணவியை இழுத்து சென்ற போலீஸ் !
ஆனால், அவருக்கு தூக்கி செல்லத் தெரியவில்லை. தொடர்ந்தும் போராட்ட த்தில் ஈடுபட்ட அந்த இளம் பெண்ணை, எப்படி தூக்க வேண்டு மென்று, மகளிர் போலீஸ்க்கு , உதவி கமிஷனர் செய்து காட்டுகிறார். 

உதவி கமிஷனர் செய்து காட்டிய பிறகும், அந்த பெண்ணை தூக்குவதற்கு மகளிர் போலீஸ் திணறிய தால், இது கூட செய்யத் தெரியலையாமா? என்று மகளிர் போலீசை திட்டுகிறார் உதவி கமிஷனர். 

 நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மகளிர் எஸ்.ஐ வர வழைக்கப்பட்டு, அந்த மாணவியை குண்டு கட்டாக தூக்கி செல்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings