மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:- பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரெயில் பெட்டிகள் அறிமுகப் படுத்தப்படும்.
எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம் ரெயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்படும். பத்திரிகை யாளர்களுக்கு சலுகை விலையில், இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.
முன் பதிவில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். ரெயில் நிலைய மேம்பாடு திட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, திருப்பதி சேர்க்கப்படும்.
சென்னையில், இந்தியாவிலேயே முதன் முறையாக ரெயில் தானியங்கி மையம் அமைக்கப்படும். அடுத்த நிதியாண்டில் சரக்கு ரயில் களுக்கான பணிமனைகள் அமைக்கப்படும்.
சேட்டிலைட் மூலம் ரெயில்வே திட்டங்கள் கண்காணிக்கப்படும். குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களுக்கு பால் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ரெயில்களில் புதிய ஏசி சேவை துவக்கப்படும்.
முறைகேடுகளை தடுக்க தட்கல் கவுன்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
சரக்கு ரெயில்களின் வேகத்தை சராசரியாக மணிக்கு 50 கி.மீ., என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்வே பணியாளர்களின் திறன் மேம்படுத்தப்படும்.
அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கப்படும். ரெயில்கள் மோதிக் கொள்வதை தவிர்க்கும் தொழில்நுட்பம், நெரிசல் மிக்க தடங்களில் அனைத்து ரெயில்களிலும் அடுத்த ஆண்டு ஏற்படுத்தப்படும்.
பெங்களூரில் புறநகர் ரயில் வசதி மாநில அரசின் பங்களிப்போடு ஏற்படுத்தப் படும். புறநகர் வழித்தடத்தை மேம்படுத்த தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா மாநிலங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
பிரதமரின் பொருளாதார தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் ரெயில்வே பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது.