டாக்சியை கேன்சல் செய்த பெண்... எஸ்.எம்.எஸ். செய்த டிரைவர் !

1 minute read
பெங்களூரில் இளம்பெண் ஒருவருக்கு ஓலா கேப் டிரைவர் எஸ்.எம்.எஸ். மூலம் கெட்ட வார்த்தையை அனுப்பி வைத்துள்ளார். பெங்களூரில் இளம் பெண் ஒருவர் ஓலா கேப்பை புக் செய்துள்ளார்.
டாக்சியை கேன்சல் செய்த பெண்... எஸ்.எம்.எஸ். செய்த டிரைவர் !
பின்னர் ஏதோ காரணத்திற்காக புக் செய்த கையோடு கேப்பை கேன்சல் செய்துள்ளார். இதையடுத்து ஓலா நிறுவனத்தில் இருந்து கேப்பை கேன்சல் செய்ததற்கான எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.

அதன் பிறகு அவர் கேன்சல் செய்த கேபின் டிரைவர் அவருக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் அந்த நபர் அப்பெண்ணுக்கு எஸ்.எம். எஸ். மூலம் கெட்ட வார்த்தையை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் இது குறித்து ஓலா நிறுவனத்தில் புகார் தெரிவிக்க அவர்களும் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். 
அந்த பெண் ஓலா கேப் டிரைவரின் சேட்டை பற்றி சமூக வலைதளங்களில் தெரிவிக்க பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

ஓலா டிரைவர்களில் சிலர் கேபை புக் செய்தாலும் அவர்களுக்கு இஷ்ட மில்லா விட்டால் வேண்டும் என்றே கண்ட இடங்களில் எல்லாம் சுத்தி விட்டு நம்மை கேன்சல் செய்ய வைப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings