விஜயகாந்தை கிண்டல் செய்வதற்கு முன் சில உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1982 முதல் 2000வரை நடிகர் சங்கத்தில் நடைபெற்றிருந்த ஊழல்களின் விளைவாக சங்கத்தின் கடன்சுமை கோடிகளில் இருந்தது.
தான் தலைமையேற்று சொந்தப் பணம் 10 லட்சம். கலை நிகழ்ச்சிகள் என கடனை ( 4.5 கோடி ) 2.5 கோடி தன் நிர்வாக திறமையால் அடைத்தவர் விஜயகாந்த்.
1 கோடிக்கு மேல் லாபம் சங்கத்தில் வைத்து விட்டு கட்சி துவங்கியவுடன் கட்சித் தலைவர் சங்கத் தலைவராகவும் இரு பதவிகளில் இருக்க கூடாது என்று எண்ணி சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகினார்.
இவர் அவதூறாகப் பேசினார் என்றுதான் வழக்குகள் உள்ளனவோ தவிர , ஒரு முறைகேடு புகார் கூட இல்லாத இந்திய மாநிலங்களின் ஒரே எதிர்கட்சி தலைவர்.
கட்சி நிதி மாநாடு நிதி என்று கடைகளில் வசூல் செய்யக் கூடாது என்று கூறியுள்ள ஒரே கட்சி தலைவர்.
இதுவரை மாநாட்டிற்காக அது இது எனக் கூறி கடை அதிபர்கள், நகைக்கடை அதிபர்களிடம் பணவசூல் செய்யக் கூடாது என்று கட்சி நடத்துபவர்.
கட்சி நிதி வாங்கிக் கொண்டு MLA சீட் தராத நபர். இவரின் 29 mla களில் பலர் ஏழைகளாய் இருந்து mla ஆன பிறகுதான் லோன் பெற்று கார் வாங்கியவர்கள்.
இவரது MLA களில் சிலர் இவரை தான் ஏமாற்றினார்களே தவிர , இவர் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. மேலும் மருத்துவ மனைகளுக்கு இலவச பொருளுதவி .
மேலும் நடிகராக இருந்த காலத்தில் இயற்கை சீற்ற பாதிப்புகாலங்களில் அதிக நிதி கொடுக்கும் நடிகர் இவர் தான்.
விஜயகாந்த் உண்மையான மனிதர். கோபம் அவரது இயல்பான சுபாவம். தைராய்டு கோளாறு எனவே பேச்சில் சற்று தடுமாற்றம் வரும்.
அதற்காக அவரை கிண்டல் செய்ய வேண்டாம்.
நல்லவர்களை கிண்டல் செய்ய வேண்டியதில்லை. எவ்வளவோ ஊழல்வாதிகள் கட்சி நடத்துகிறார்கள்.
பேச்சுத் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை கிண்டல் செய்வதை விடுத்து விஜயகாந்த் போன்ற நல்லவர்களை கிண்டல் செய்வதை தவிர்க்கலாமே.