கூகுளின் பாராட்டை பெற்ற மாணவி மாஷா நஜீம் !

தமிழகத்தின் தென் கோடியான நாகர்கோவிலில் பிறந்து; இன்று தேசமே திரும்பி பார்க்கும் வகையில் பல சாதனைகளை புரிந்து வருபவர் மாஸா நஜீம் என்ற பொறியியல் மாணவி.
கூகுளின் பாராட்டை பெற்ற மாணவி மாஷா நஜீம் !
தனது ஒன்பதாவது வயதிலிருந்து தன்னுடைய புதிய கண்டுபிடிப்பு வேலைகளை தொடங்கி விட்டார். முக்கிய தலைவர்களின் பாதுகாப்புகளில் பயன்படும் வகையில் நவீன அலாரம் ஒன்றை வடிவமைத்தார்.

இரயில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பறையை வடிவமைத்தார். அத்துடன் மின்னணு போர்ட்டர் ஒன்றையும் வடிவமைத்தார். 

இப்படி பல புதிய திறன் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை தனது பள்ளிப் பருவத்திலேயே உருவாக்கினார்.

எனவே, அதே பள்ளியை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார்.

அத்துடன், தன்னுடைய பெயரில் ஒரு அறிவியல் ஆய்வுப் பிரிவு ஒன்றை தொடங்கி அதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறார். 

இந்த மாஸா ஆக்கத்திறன் ஆய்வு மையத்தில், இரண்டு ஆண்டுகளில் ஆறு மாணவர்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். 
இந்தியாவிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் சிறப்புரை ஆற்றியுள்ளார். அமெரிக்காவின் கூகுள் நிறுவனமும் இவரின் சாதனைகளை தன்னோடு இணைத்து கொண்டுள்ளது.

எனவே, இனி வரப்போகும் ஒரு புதிய தொழில் நுட்ப உலகத்தை வழிநடத்தப் போகும் முன்னேர் கொழு நமது கைகளில் தவழ்ந்து கொண்டுள்ளது. அதை சிறப்பாக முன்னெடுப்போம்!
Tags:
Privacy and cookie settings