பலாத்காரத்தில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ராஜஸ்தானை சேர்ந்த நிரஞ்சன் சுதார் என்ற மாணவர் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார். இந்த எலெக்ட்ரிக் கருவி 150 கிராம் எடை கொண்டது.
இதை பெண்கள் தங்கள் கைகளில் அணிந்து கொள்ளலாம். யாரா வது சமூகவிரோதிகள் தவறான நோக்கத்தில் தொட்டால் கருவியின் பொத்தானை அழுத்தினால் போதும்.
எதிரியின் உடலில் 220 வால்ட் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடிக்கும். மேலும் அந்த பெண் ஆபத்தில் இருப்பதாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு வீடியோ பதிவுடன் குறுந்தகவலும் அனுப் பப்பட்டு விடும்.
ஜிபிஎஸ் மூலம் இருப்பிடமும் அடை யாளம் காட்டப்படும். கடந்த ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் நிரஞ்சன் சுதாரின் இந்த கருவி முதல் பரிசைப் பெற்றது.
இவர் ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டம், அஹோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது:
கடந்த 2012-ல் டெல்லி மருத்துவ துணை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது மனதை வெகுவாகப் பாதித்தது.
இனிமேல் நமது சகோதரிகளுக்கு அது போன்ற சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக புதிய கருவியை கண்டுபிடித்தேன்.
இதை கிளவுஸ் போன்று கைகளில் அணிந்து கொள்ளலாம். அந்த கிளவுசில் ஒரு சிம் கார்டு, ஜிபிஎஸ் கருவி, வீடியோ கேமரா, பேட்டரி, டிரான்ஸ் பார்மர் ஆகியவை பொருத்தப் பட்டுள்ளன.
ஒரு கிளவுஸை தயாரிக்க ரூ.500 மட்டுமே செலவானது. ஆபத்து நேரத்தில் இந்த கருவியின் பொத்தானை அழுத்தினால் போதும். 220 வோல்ட் மின்சாரம் எதிரியின் உடலில் பாய்ந்து நிலை குலையச் செய்து விடும்.
அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு வீடியோ பதிவுடன் குறுந் தகவலும் அனுப்பப்பட்டு விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.