திருநங்கையர் நலனுக்காக கேரளாவில் ஜி-டாக்சி சேவை !

திருநங்கையர் நலனுக்காக, திருநங்கையரால் நடத்தப்படும் 'ஜி-டாக்சி' சேவையை கேரள அரசு விரைவில் துவங்க திட்டமிட்டு உள்ளது. கேரளாவில் பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும்,
திருநங்கையர் நலனுக்காக கேரளாவில் ஜி-டாக்சி சேவை !
ஷி-டாக்சி சேவை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதை பின்பற்றி, பிரதான சமூகத்தில் தங்களுக்கென ஒரு இடத்தை கண்டுபிடிக்கவும் பொருளாதார ரீதியில் மேம்படவும்

கடினமாக பாடுபடும் திருநங்கைகளை, விரைவில் தொழில் முனைவோராக மாற்ற கேரள அரசு ஒரு திட்டம் தீட்டி உள்ளது.

அதன்படி திருநங்கையரை, சமூக நீரோட்டத்தில் இணைக்கும் திட்டமாக, 'ஜி-டாக்சி' எனப்படும் வாடகைக் கார் சேவையை துவக்க கேரள அரசு முனைந்துள்ளது.

கேரள அரசின் சமூக நீதித்துறை, உருவாக்கிய இந்த திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் திருநங்கையர் இருப்பர்.

'ஷி - டாக்சி' திட்டத்தை செயல்படுத்திய, 'ஜெண்டர் பார்க்' நிறுவனத்திடம், ஜி - டாக்சி திட்ட பொறுப்பை கேரள அரசு ஒப்படைத்து உள்ளது. விரைவில் 'ஜி-டாக்சி' சேவை கேரளாவில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
திருநங்கையர் நலனுக்காக கேரளாவில் ஜி-டாக்சி சேவை !
கேரள அரசின் முந்தைய திட்டமான 'ஷி-டாக்சி', பெண்களால், பெண்களுக்காக இயக்கப் படுகிறது. 

இதே போல், திருநங்கையரை பொருளாதார ரீதியில் மேம்படுத்த, தற்போது கேரள அரசு 'ஜி-டாக்சி' திட்டத்தை தொடங்க உள்ளது.

இந்த 'ஜி-டாக்சி'யில், ஜி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். மேலும், 'ஜி-டாக்சி'யில், பாலின பாகுபாடின்றி யாரும் பயணிக்கலாம் என்பதால் இது, 'சமத்துவ டாக்சி' திட்டமாகவும் அங்கு கருதப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings