மாணவர்கள் துப்பாக்கியுடன் வர அமெரிக்க பல்கலை அனுமதி !

மாணவர்கள் புத்தகங்களுடன் கைத்துப்பாக்கியையும் கொண்டு வரலாம் என அமெரிக்க பல்கலை கழகம் அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் துப்பாக்கியுடன் வர அமெரிக்க பல்கலை அனுமதி !
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள டெக்சாஸ் பல்கலை மிகவும் பிரபலமானது. இங்கு 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

இந்த பல்கலையில் தான் முதன் முதலில் 1966ல் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர். 

கடந்த 2015 அக்டோபரில் மாணவர்களில் சிலர் வகுப்புக்கு துப்பாக்கியுடன் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் மாணவர்கள்,வகுப்புகளுக்கு துப்பாக்கியுடன் வரலாம் என பல்கலை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 
ஆனாலும் வகுப்பை தவிர பிற பகுதிகளுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பல்கலை கழகத்தின் இந்த அறிவிப்பு அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings