அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர் விஜயகாந்த் !

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்பதால் இளைஞர்கள் யாரும் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர் விஜயகாந்த் !
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு தேர்த லிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு இறுதிக் கட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் செய்வார்கள். 

அது மிகவும் பரபரப்பாகவும், வேகமாகவும் இருக்கும். அதை தமிழக மக்கள் ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறார்கள்.

ஆனால் ஆளுகின்ற அதிமுக அரசு ஆட்சியை விட்டு வெளியேறும் நேரத்தில் அரசு துறையிலுள்ள காலிப் பணியிடங் களை நிரப்புகிறேன் என்கின்ற பெயரில் அவசர அவசரமாக உரிய தேர்வுகளோ, 

முறையான நேர்காணலோ எதுவுமின்றி, லட்சக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு, ஆயிரக்கணக் கானோரை அதிமுக அரசு பணியில் அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பணி நியமன த்தை அதிமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
தற்போது ஆட்சி யிலுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் அதிக பட்சம் ஒரு மாத காலம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு வந்த உடனே அதிகார மற்ற அரசாக அதிமுக அரசு மாறி விடும்.

2011ல் ஆட்சிக்கு வந்த இரண்டாண் டுகளில் நேர்மை யான முறையில் அரசுப்பணி நியமனங் களை செய்திருந்தால், அது குறித்து யாரும் கேள்வி எழுப்பி யிருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது அதை செய்வ தால் பலத்த சந்தேகம் உண்டாகிறது. உச்ச நீதிமன்ற வழக்கை தனக்கு சாதக மாக்கிக் கொள்வத ற்காகவே இது போன்று பணி நியமன வசூல் வேட்டையில் ஆட்சியா ளர்கள் இறங்கி யுள்ளதா கவும் சொல்லப் படுகிறது.

எனவே இது போன்ற சூழ்நிலையில் ஆட்சியாளர்களின் வாக்குறு தியினை நம்பி வேலை வாய்ப்பற்று வேதனையில் இருக்கின்ற இளைஞர்கள் 

யாரும் அரசு வேலைக்காக இலட்சக் கணக்கான ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டா மென கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து தமிழகத் தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி யாகும். அதே சமயத்தில் அதிமுக ஆட்சிக்கு வரவே இயலாது. 

எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வுடன், அதிமுக அரசின் இறுதி காலத்தில் நியமனம் செய்யப் பட்ட அனைத்து நியமனங்களும் உறுதியாக ரத்தாகும்.

லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு லோக் ஆயுக்தா தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள இந்த சமயத்தில், 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பல்வேறு கேள்வி களை எழுப் பியுள்ளது.

தனக்கு வேண்டிய வர்களை காப்பாற்றவே இது போன்ற அரசாணை வெளியிடப் பட்டுள்ளதாகவும், லஞ்சத்தையும், ஊழலையும் இந்த அரசாணை ஊக்குவிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர் விஜயகாந்த் !
ஜெயலலிதா அமைச்சர வையி லுள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளை யடிக்கி றார்கள் என்ற அதிமுக எம்.எல்.ஏவின் குற்றச் சாட்டும் இதன்மூலம் உண்மையா கியுள்ளது.

மேலும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் உறுப்பினர் களாக, அவசர அவசரமாக அதிமுக வினரை நியமனம் செய்து ள்ளதை உயர் நீதிமன்றம் கண்டித்து விசார ணைக்கு எடுத் துள்ளது.

நீதித் துறையில் இனி மேலும் பணிபுரிய தகுதி இல்லை யென கட்டாய ஓய்வ ளிக்கப் பட்ட நீதிபதியை, நியாயமான முறையில், தகுதியான நபர்களை ஆயிரக் கணக்கில் தேர்வு செய்யும்
மிக முக்கியமான இடத்தில் அவரை நியமித் துள்ளதே, ஜெயலலிதா அரசின் மிக மோசமான நிர்வாக சீர்கேட்டி ற்கும், லஞ்சம், ஊழலு க்கும் சரியான உதாரண மாகும்.

எனவே மோசமான முறையில் ஆட்சி நடத்தும் தற்போதைய அதிமுக ஆட்சியை அகற்ற, தமிழக மக்கள் உறுதி யோடும், உறுதுணை யாகவும் இருக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத் தியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings