அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவ ரான டாக்டர் ஜெமீலா தனது முதல் கவிதையை வெளியுலகுக்கு வெளிப் படுத்தி யுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணியில் செயல் பட்டு வந்த ஜெமீலா மற்றும் பல முக்கியஸ் தர்கள் சமீபத்தில்தான் சரத்குமா ரின் கட்சியி லிருந்து விலகி பாஜக வில் இணைந்தனர்.
பன்முகம் கொண்ட வராக தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஜெமீலா தனக்குள் இருக்கும் கவிதாயி னியை முதல் முறையாக அறிமுகப் படுத்தி யுள்ளதாக கூறி தனது முகநூலில் ஒரு கவிதையை வெளியிட் டுள்ளார். அது…
இதுவரை என் நெருங்கிய உறவுகள் மட்டுமே அறிந்த, எனக்குள் இருக்கும் கவிதாயி னியை நான் முதன் முறையாக உங்களுக்கு அறிமுகப் படுத்து கிறேன். என்னுள் உறங்கிய பாரதியை மெல்லென தட்டி எழுப்பி விட்டேன்.
எழுந்தவன் எழுச்சியை எனக்களித்து எழுதிடச் சொன்னான் கவிதனையே என்னென் றெழுத. நான் ஏதென்றெழுத. திகைத்த என்னை முறைத்த அவனே பெண்ணின் விடுதலை பாடச் சொன்னான்.
நாடே விடுதலை யான பிறகு பெண்ணுக் கொரு தனி விடுதலை உண்டோ என்றே கேட்டேன். வீறுகொண் டவன் கூறிய வரிகளில் கூர்மை இருந்ததை நானறிந் தேன்.
அழகிய பெண்ணுக்கு அழகே எதிரி. அறிவில் சிறந்தால் அறிவும் எதிரி ஆளுமை கொண்டால் அதுவும் எதிரி. சிரித்தே பழக உறவும் எதிரி எத்திசை நோக்கினும் எதிரியே உனக்கு முழுதாய் சுதந்திரம் கிடைத்ததா உனக்கு.
தீயெனும் கேள்வியில் அறிவினைச் சுட்டான்.
தீஞ்சுவை தமிழ்தனில் மனதினை தொட்டான்.
உண்மைதானே கூறடி பெண்ணே.
இந்நிலைக் காரணம் யாரடி பெண்ணே.!