இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 77 வயதான நபரொருவர் 47ஆவது முறையாக 10ஆம் வகுப்பு பொது பரீட்சையை எழுதிக் கொண்டிருப்ப தாகவும் தான் பரீட்சையில் சித்தியடைந்தால் தான் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோகார் கிராமத்தை சேர்ந்தவர் சிவ் ஷரண் யாதவ் (77). இவர் கடந்த 1968ஆம் ஆண்டு முதன் முறையாக 10ஆம் வகுப்பு பரீட்சை எழுத ஆரம்பித்துள்ளார்.
ஆனால் இதுவரை அவரால் சித்தியடைய முடியவில்லை. தற்போது 47ஆவது முறையாக அவர் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்து விடுவது ஷிவ் சரணின் குறையாக இருக்கிறது. ஆனாலும் விடாமல் முயற்சிப்பதும் ஷிவ் சரணின் முடிவாகவும் தெரிகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பாடத்தில் கோட்டை விட்டு விடுகிறேன். கடந்த 1995ஆம் ஆண்டு கணிதத்தை தவிர அனைத்து பாடத்திலும் சித்தியடைந்து விட்டேன்.
எனது இந்த முயற்சியை எங்கள் கிராமத்தினர் கை விட்டுவிடக் கூடாது என கூறியிருக்கின்றனர். அதனால் சில ஆசிரியர்களிடம் பகுதி நேர வகுப்புக்குச் சென்றுள்ளேன்.
இந்த முறை அனைத்து பாடத்திலும் நிச்சயம் சித்தியடைந்து நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார்.