கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி யுள்ளதாகவும் தெரிகிறது. வடக்கு கொல்கத்தாவில் கணேஷ் திரையரங்கு அருகே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகலில், பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.
இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 10 வரை இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 100 பேர் வரை சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள வாகனங்களிலிருந்து கசிந்த எரிபொருள் மூலம் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு தூண்கள் அப்படியே கீழே விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.