ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை !

1 minute read
இந்தியர் ஒருவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். .
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை !
இச்சம்பவம் மும்பை நகருக்கு அருகிலுள்ள தானேயில் இடம் பெற்றுள்ளது ஹஸ்னின் வரேக்கார் என்ற 35 வயதுடைய நபரே, 

இவ்வாறு தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்திக் குத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறார்கள். 
வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் உதவிக்கோரி அலறும் சத்தம் கேட்ட அயலவர்கள், தம்மை அழைத்து தகவல் வழங்கினர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
கொலையாளியின் சகோதரியான இந்தப் பெண் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.

இவர்களை கொலை செய்தவதற்கு முன்னர் வீட்டின் அனைத்து கதவுகளையும் கொலையாளி மூடியிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
லாட்டரியில் ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி !
உறவினர்களை கொலை செய்தததன் பின்னர், அந்த நபர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சொத்து விவகாரமே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தாம் நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings