மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் ஷாருக்கானின் வீட்டுக்கு அருகே கான்கிரீட் சரிவுப்பாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.
ஷாருக்கானால் கட்டப்பட்ட இந்த சரிவுப்பாதை சட்ட விரோதமானது என்றும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, இதனை மாநகராட்சி இடித்து தள்ள முடிவெடுத்தது.
இதற்காக ஷாருக்கான் அபராதம் ஏதும் செலுத்தினாரா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் ஆனந்த் கல்கலி விண்ணப்பித்திருந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், சரிவுப்பாதையை இடித்து தள்ளுவதற்கான கட்டணமாக 1 லட்சத்து 93 ஆயிரத்து 784 ரூபாயை
காசோலை வாயிலாக மாநகராட்சியிடம் ஷாருக்கான் அளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.