டெல்லியில் நடைபெற்று வரும் '2.0' படப்பிடிப்பில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டி நடை பெறுவது போல காட்சிப்படுத்தி வருகிறார்கள்.
இயக்குநர் ஷங்கரின் 2.0 படப் படப்பிடிப்பு டெல்லியின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கால்பந்து ஆட்டம் நடைபெறுவதைப் போல பிரம்மாண்டமான காட்சி படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 40 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்க வுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படத்தின் 2-ஆம் பாகமான 2.0 படத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் ஆகியோர் பிரதான பாத்திர ங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்பொது டெல்லியில், இந்திய கால்பந்து லீக் தொடரில் சென்னைக்கும் மும்பைக்கும் போட்டி நடப்பது போன்ற காட்சி, டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மைதானத்தின் ஒரு பகுதி பெரிய பலூன்களால் அலங்கரிக்க பட்டுள்ளது. மைதானத்தை சுற்று ஃபுட்பால் வடிவ பலூன்கள் தொங்க விடப்பட்டுள்ளன.
உண்மையான கால்பந்து ஆட்டத்துக்கான ஏற்பாடுகளைப் போலவே செய்யப் பட்டுள்ளன.
இந்த மொத்த படப்பிடிப்பும் மிக ரகசியமாக நடைபெற்று வருவதால், மைதானத்து க்குள் நுழைந்து படம் எடுக்க முயற்சித்த ரசிகர்கள் பலர், படமெடுக்க வேண்டாம் என வலியிறுத்தப் பட்டுள்ளனர்.
அங்கு ஏற்கனவே நடந்து வரும் ஒரு பயிற்சி ஆட்டம், படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரஜினி, அக்ஷய்குமாரை பார்க்க வந்த ரசிகர்களும் அவர்கள் இல்லா ததால் ஏமாற்ற மடைந்தனர்.