பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இந்த அளவுக்கு இது வரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத் தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எந்திரன் 2 எனப் பெயரிடப் பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது.
மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங் களால் காப்பீடு செய்யப் பட்டுள்ளன.
இந்தியத் திரை படத் துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன.
படப்படிப்பில் எதிர்பாராத வகையில் ஏற்படும் இடையூறுகள், கலைஞ ர்களின் உடல்நலக் குறைவால் உருவாகும் தாமதங்களால் ஏற்படும் நஷ்டங்கள், படம் வெளியாகத் திட்டமிடப் பட்டுள்ள நாளில் அசம்பா விதங்களால்
அது தடைபடுதல் போன்ற பல காரணங் களுக்காகவே திரைப்படங்கள் காப்புறுதி செய்யப் படுகின்றன என்று பொதுத்துறை நிறுவனமாம
யுனைட்டெட் இந்தியா இன்ஷ்யுரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலான் இயக்குநருமான வி ஜெகன்நாதன் தெரிவித்தார்.
எனினும் படப்பிடிப்பு காலத்தில் கலைஞர்களின் உயிரி ழப்புக்கு இந்தக் காப்புறுதிகள் பொருந்தாது எனவும் அவர் கூறுகிறார்.
தெறி டிரைலரில் தெறிக்கவிடும் விஜய்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரை யரங்கில் மிக பிரம்மாண் டமான முறையில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவிலேயே இப்படத்தின் டிரைலர் காட்சியும் தெறி டிரைலரும் வெளியிடப் பட்டது. மொத்தம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் டிரைலர் உருவாக்கப் பட்டுள்ளது.
டிரைலரை பார்க்கும் போது படத்தில் தந்தை-மகள் உறவுக்கு அதிக முக்கிய த்துவம் கொடுக்கப் பட்டுள்ளது தெளிவாகிறது.
இயக்குனர் அட்லியே கூறியிருப்பது போல் ரொமான்டிக் விஜய், மாஸ் விஜய், அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச அவருக்கு
நெருங்கிய வர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் என்று மூன்று கெட்டப்புகளில் அசத்தியுள்ளார் விஜய்.
தெறி படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத் துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண் டமாக தயாரித் துள்ளார்.
Tags: