5 மாத குழந்தையின் விலை 1 லட்சத்து 25 ஆயிரம் !

1 minute read
கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்த வரதராஜன்,
5 மாத குழந்தையின் விலை 1 லட்சத்து 25 ஆயிரம் !
அமலா தம்பதிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 31ம் திகதி வரதராஜன், 5 மாத ஆண் குழந்தை ஒன்றுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அந்த குழந்தையை தத்தெடுத்து வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த குழந்தை 2 நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந் துள்ளனர்.

இதை யடுத்து நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்னர். உதவி மைய அதிகாரி மேரி பெனி, நேரில் சென்று விசாரித்த போது தான் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.
அந்த நபர் அந்த குழந்தையை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளார். 

 அந்த குழந்தை கொட்டாரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மாரிமணி மாலா தம்பதியினருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. 

சதீஷ்குமார் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வந்ததால், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அவரது வறுமையை பயன்படுத்தி யுள்ளனர்.

பண ஆசையில் சதீஷ்குமாரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால், வரதராஜன் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்து குழந்தையை வாங்கி யுள்ளார். 
குழந்தைகள் உதவி மைய அதிகாரி மேரிபெனி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் குழந்தையை விற்ற சதீஷ்குமார், 

அதனை வாங்கிய வரதராஜன், இதற்கு உதவியாக இருந்தவர்கள் என வழக்குப் பதிவு செய்து 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings