ரூ.50 டிக்கெட்டில் 100 பேர் அமர்ந்து பார்க்கும் சிறிய தியேட்டர்களை தமிழகம் முழுவதும் கட்ட வேண்டும் என்று டைரக்டர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
நான் கடவுள் ராஜேந்திரன், லொல்லுசபா சாமிநாதன், கிருஷ்ண மூர்த்தி, அர்ச்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித் துள்ள படம், யானை மேல் குதிரை சவாரி.
கருப்பையா முருகன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனி யில் நடந்தது.
டைரக்டர் பாக்யராஜ் பாடல் சி.டியை வெளியிட டைரக்டர் பேரரசு பெற்றுக் கொண்டார். விழாவில் டைரக்டர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
‘‘நகர்ப் புறங்களில் தியேட்ட ர்கள் 5 நட்சத்திர தரத்துக்கு மாறி விட்டன. மல்டி பிளக்ஸ் திரையரங் குகள் கணிசமாக உருவாகி வருகிறது. இந்த தியேட்டர் களில் படம் பார்க்க சென்றால்,
டிக்கெட் கட்டணம் மற்றும் திண் பண்டங் கள் என்று ஒருவருக்கு ரூ.1,000 வரை செலவா கிறது. நடுத்தர ஏழை மக்களால் இவ்வளவு செலவு செய்து படம் பார்க்க முடியாது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர் களுக்கு வருபவர்கள் பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கவே ஆர்வப்படு கின்றனர்.
இதனால் அது போன்ற படங்களையே அங்கு திரையிடு கிறார்கள். சிறு பட்ஜெட் டில் தயாராகும் படங்கள் அங்கு திரையிடப்படுவது இல்லை.
இந்த சிறுபட்ஜெட் படங்களை குறைந்த கட்டணத்தில் சிறிய ஊர்களில் திரையிட்டால் மக்கள் பார்ப்பா ர்கள். அந்த படங்களை தயாரித்த தயாரிப் பாளர் களும் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கப் படுவார்கள்.
இதற்காக கிராமப் புறங்களில் 100 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய சிறிய திரையரங் குகளை கட்ட வேண்டும்.
அங்கு ரூ.50 கட்டணம் வசூலித்து சிறு பட்ஜெட் படங்களை திரையிடலாம். இதன் மூலம் திருட்டு சி.டிக்கள் ஒழியும்.
சினிமா தொழில் நஷ்டம் இல்லாமல் பாதுகாக்கப்பட இது போன்ற புதுமை யான திட்டங் களை அமல் படுத்த வேண்டும். இதற்கான நடவடிக் கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.
இவ்வாறு ஆர்.கே. செல்வமணி பேசினார்.
தயாரி ப்பாளர்கள் ‘கில்டு’ செயலாளர் ஜாகுவார் தங்கம், இசையமைப் பாளர்கள் தாஜ்நூர், இமாலயன், தயாரிப் பாளர்கள் ரேகா கணேஷ், ஆர்.எஸ்.புஷ்பலதா உள் ளிட்ட பலர் பேசினா ர்கள்.